தமிழகத்தில் நவ.15 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ.9- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழ மையன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 10 அன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்க ளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நவ. 23 - கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு
சென்னை, நவ. 9 - தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், இந்த முறை நிர்வாக காரணங்களுக்காக அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில், நவம்பர் 23 அன்று காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதித்யநாத் - அமித் ஷா இடையே மோதல்
ஒன்றிய அரசு அனுமதியின்றி டிஜிபியை நியமிக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
புதுதில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாநிலத்தை ஆட்சி செய்தா லும் காவல்துறை இயக்குனரை (டிஜிபி-யை (DGP - Director general of police)) நியமிக்க ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டும். ஒரு மாநில அரசு டிஜிபி தேர்வுக்காக 5 காவல்துறை அதிகாரிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யுபிஎஸ்சி -க்கு (ஒன்றிய அரசு பணியாளர் தேர் வாணையம்) அனுப்பும். அதில் 3 பெயர்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய்யும். எனினும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை இன்றி டிஜிபி நியமன பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சி மாநில அரசுக்கு வழங்காது. இறுதியில் யுபிஎஸ்சி பரிந்துரைகளில் யாரையாவது ஒருவரை மாநில அரசு டிஜிபி பணியில் அமர்த்தும். இந்நிலையில், ஒன்றிய அரசின் அனுமதியின்றி சுதந்திரமாக டிஜி பியை நியமிக்க பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இதற்கு அம் மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இனி உத்தரப்பிரதேச பாஜக அரசு டிஜிபி பரிந்துரை பெயர்க ளை யுபிஎஸ்சி-க்கு அனுப்பாமல், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விற்கு அனுப்பும். அதன் பின் மாநில அரசு தேர்வாணையத்தின் பரிந்துரை கள் மூலம் புதிய டிஜிபி-யை தேர்வு செய்ய உத்தரப்பிரதேச அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ராஜபுத்திரர்கள் பிரச்சனையா? 18ஆவது மக்களவைத் தேர்தல் அறி விக்கப்பட்ட நேரத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரூபலா ராஜபுத்திர சமூக பெண்கள் குறித்து சர்ச்சைக்கு ரிய வகையில் பேசினார். இந்த பிரச் சனை மற்றும் முதல்வர்- துணை முதல் வர் நியமனம், டிஜிபி நியமனம் தொ டர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கும் மோதல் போக்கு நீடித்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் இது வெறும் வதந்தி என பாஜக கூறியது. இந்நிலையில், டிஜிபி நியமனம் மூலம் அமித் ஷாவுக்கும் - ஆதித்ய நாத்துக்கும் மோதல் இருப்பது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் தலையீட்டை தடுக்கவே கடந்த சில மாதங்களாக முதல்வர் ஆதித்யநாத் 4 தற்காலிக டிஜிபி-க்களை நியமித்து வந் தார். இத்தகைய சூழலில் தனது நம்பிக் கைக்குரிய பிரசாந்த் குமாருக்கு முழு நேர டிஜிபி பதவியை வழங்க ஆதித்ய நாத் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒன்றிய அரசின் தலையீடு இன்றி சுதந்திரமாக டிஜிபியை நியமிக்க கடந்த ஆண்டு சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவ விரிவுரையாளர்களை கலந்தாய்வில் சேர்க்க கோரிக்கை
சென்னை,நவ.9 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ் அறிக்கை வருமாறு: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டு களுக்கு பின் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் கல்வி நலன் கருதி, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணி யாற்றும் துறையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை வரவேற்புக்குரியது. இந்த 50 சதவீதம் கணக்கீட்டிற்கு, துறையில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர் கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடந்த கலந்தாய்வின் போது, இந்த 50 சதவீத கணக்கீட்டிற்கு, கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை கணக்கில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அரசு கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்டுள்ள பணியிடங்கள் சுமார் 13000 ல், 4500 நிரந்தர ஆசிரியர்கள் மட்டும் பணி புரிந்து வரும் நிலையில், 50 சதவீத கணக்கீட்டிற்கு கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை யும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பணி இடமாறுதல் கலந்தாய்வில் மிகக் குறைந்த ஆசிரியர்களே பயன் பெற முடியும். மேலும், கலந்தாய்வுக்கு முன்னதாக இரண்டு ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய கல்லூரிகளில் மாற்றுப்பணியில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களின் மாற்றுப் பணியினை இரத்து செய்ய வேண்டும் எனவும், கலந்தாய்வுக்கு முன்னதாக இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பி விட்டு, இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்க ளையும் கலந்தாய்வின் போது காட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை,நவ.9- குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்க ளில் 7,93,947 தேர்வர்கள் தேர்வு எழுதியதாக தகவல் வெளியானது. குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, 2,540 பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விவரங்களை சேகரிக்க பதிவுத்துறைக்கு உத்தரவு
சென்னை,நவ.9- உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி பதிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஓய்வுக்குப் பின் அவர்களை தற்காலிக நீதிபதிகளை நியமிக்க ஏதுவாக, புள்ளி விவரங்க ளை கடைபிடிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை உயர் நீதி மன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண் ்ணிக்கை 75. தற்போது 66 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் ஓய்வுபெற உள்ள னர். அதனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறை வதற்கு பதிலாக அதிகரித்து வரு கிறது. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. நீதிபதிகளுக்கான ஓய்வு வயது நிர்ணயம் செய்வது என்பது பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற சட்ட அனுபவங்களை, வயதை காரணம் கூறி நிறுத்துவதற்கு சமமாகும். இந்திய அரசியலமைப்பு 224A இன் படி, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை உயர் நீதி மன்றங்களில் தற்காலிகமாக நிய மிப்பது குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்” என்று குறிப் பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஶ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, பதிவுத்துறை ஓய்வுபெற்ற நீதிபதி களின் விவரங்களை பல்வேறு கார ணங்களுக்காக சேகரிக்க உத்தர விட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தற்காலிக நீதிபதிகள் நியமிப்பதாக இருந்தால் இந்த புள்ளி விவரங்கள் உபயோகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டிரக் மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடக்கோரி வழக்கு
சென்னை,நவ.9- தமிழக அரசின் ‘டிரக் தமிழ்நாடு’ மலையேற்ற பய ணத் திட்டத்தை கைவிட அர சுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலை யேற்ற பயணத் திட்டத்தை (டிரக் தமிழ்நாடு) அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டுமென விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “பாது காக்கப்பட்ட வனப்பகுதி களில் மலையேற்ற பய ணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச் சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி களில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும். அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவ டிக்கைகள் பாதிக்கப்படும். வனப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாது காக்கும் வகையில், மலை யேற்ற பயணத் திட்டத்தை கைவிடும் படி, தமிழக அர சுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் நிலநடுக்கம்
கிருஷ்ணகிரி,நவ.9- கிருஷ்ணகிரியில் லேசான நிலநடுக்கம் ஏற் பட்டது. . கிருஷ்ணகிரியில் சனிக்கிழமையன்று பிற் பகல் 1.32 மணிக்கு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 2,153 காவலர்கள் இடமாற்றம்
சென்னை,நவ.9- தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர் கள் முதல் உதவி ஆய்வாளர் கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனு வின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.