நாட்டில் தற்போது குளிர்கால சீசன் ஆரம்பித்துள்ளது. தேசிய தலைநகர் மண்டலமான தில்லி யில் ஊட்டி, கொடைக்கானல் போல 15 டிகிரி செல்ஸியஸுக்கும் குறைவான வெப்பநிலையுடன் குளிர் வாட்டி வரு கிறது. இத்தகைய சூழ்நிலையில் திடீரென வானிலை மாற்றத்தால் தில்லியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தில்லியின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளி த்து வருகின்றன. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் குளிர் காலத்தில் தில்லி மாநிலம் கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கையை பெற்றுள் ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லி மட்டுமின்றி உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்த ரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிர தேசம் ஆகிய மாநிலங்களிலும் குளிருடன் கனமழை புரட்டியெடுத்து வருகிறது.