சென்னை, நவ. 1 - நாடு விடுதலை அடைந்ததற்குப் பின், 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழி அடிப்படையில் மாநி லங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் சில பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்தனர். அவ்வாறு போராட்டங்களில் ஈடு பட்டு, தியாகம் செய்தவர்களை நினை வுகூரும் வகையில், மொழிவழி மாநி லங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகி கள் நாளாக தமிழக அரசு கடைப் பிடித்து வருகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டு டன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்ட தியாகிகள் நாளில் போற்றி வணங்கு கிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.