மான்டிவிடியோ, நவ. 1 - தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவேயில் நடை பெற்ற தேர்தலில் இடதுசாரிக் கூட்ட ணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி கிடைத்துள்ளது. முதலாளித்துவக் கொள்கை களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் உருகுவேயில் அக்டோபர் 27 அன்று புதிய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான உறுப்பினர் களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இடதுசாரிக் கட்சி களின் கூட்டணியான விரிவான முன்ன ணியும், வலதுசாரிக் கட்சிகளான தேசியக்கட்சி மற்றும் கொலோராடோ கட்சியும்தான் போட்டியில் இருந்தன. ஜனாதிபதித் தேர்தல் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையில் போட்டி நிலவியது. இடதுசாரிக் கூட் டணி சார்பில் யாமன்டு ஓர்சி, தேசியக்கட்சியின் அல்வரோ டெல் கடோ மற்றும் கொலோராடோக் கட்சியின் ஆண்ட் ரூஸ் ஓஜெடா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். முதல் சுற்றில் 50 விழுக்காடு பெறுபவர் வெற்றி பெறு வார். யாரும் அப்படி 50 விழுக்காட்டை பெறாத பட்சத்தில் முதலிரண்டு இடங் களைப் பெறுபவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்பார்கள். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இடதுசாரி வேட்பாளரான யாமன்டு ஓர்சி 10,58,625 (46.23%), தேசியக் கட்சி யின் அல்வரோ டெல்கடோ 6,44,638 (28.15%) மற்றும் கொலோரடோ கட்சி யின் ஆண்ட்ரூஸ் ஓஜெடா 3,85,962 (16.85%) வாக்குகளைப் பெற்றனர். யாருக்கும் 50 விழுக்காடு கிடைக் காத நிலையில் நவம்பர் 24 அன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதலிரண்டு இடங்களைப் பெற்ற யாமன்டு ஓர்சி மற்றும் அல்வரோ டெல்கடோ ஆகி யோர் அதில் போட்டியிடுகின்றனர். இடதுசாரிகள் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கீழவையில் 99 இடங் களும், செனட்டில் 30 இடங்களும் உள்ளன. கீழவையில் இடதுசாரிக் கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைத்துள் ளன. செனட்டில் உள்ள 30 இடங்களில் 16 இடங்களைப் பெற்று இடதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. நவம்பர் 24 அன்று நடைபெறும் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரிகளை ஒருங்கி ணைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் முதல் சுற்றில் 46 விழுக் காட்டைப் பெற்ற இடதுசாரி வேட்பா ளர் யாமன்டு ஓர்சி, சிறிய மற்றும் சில ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.