states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

சென்னை, நவ. 1 - நவம்பர் முதல் வாரத்  தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உரு வாக இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யானது தீவிரமடைந்து காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அது தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், நவம்பர் 2 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென் காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் விரை வில் நடைமுறைக்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட சாத்தி யமே இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “பிரதமர் மோடி தான் சொல்லி யதை ஒரு போதும் செய்தது இல்லை. காரணம் தான் சொன்னதை அவர் செய்யவே மாட்டார். அதே மாதிரி தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டமும். இந்த திட்டம் சாத்தியமற்றது.“ஒரே நாடு  ஒரே தேர்தல்” திட்டத்தை பிரதமர் மோடி யால் நடைமுறைப்படுத்தவே முடியாது” என அவர் கூறினார்.

சாலை விபத்தில் பலி: பெண் காவல் அதிகாரி   குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி

சென்னை,நவ.1- கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, கோட்டூர் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  கிருஷ்ணவேணி (51) சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு  மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். கிருஷ்ணவேணியின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தின ருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் அதிகாரிகளுக்கு விருது

சென்னை,நவ.1- தமிழக காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 முதல் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காவல் துறை, மத்திய  பாதுகாப்பு அமைப்புகள், ஒன்றிய,மாநில தடய அறிவியல், புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய நான்கு பிரிவு களில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஒன்றிய  உள்துறை அமைச்சகம் பதக்கங்களை வழங்கி கௌரவித்து வருகிறது.

5 தமிழக மீனவர்கள் விடுதலை

இராமேஸ்வரம்,நவ.1- இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர். புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தி லிருந்து கடலுக்குச் சென்ற கலைவாணன் என்பவ ருக்குச் சொந்தமான விசைப் படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த கே.ரமேஷ்(27), ஆர்.ஜானகி ராமன்(27), டி.கிருஷ்ணன் (68), குமார்(40), உ.ரமேஷ்  (51), ராஜ்(55) ஆகிய 6 மீன வர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அக்டோபர்  25 ஊர்காவல்துறை நீதிமன்றம் விசைப்படகு ஓட்டுநரான கே.ரமேஷ் என்பவருக்கு இலங்கை ரூ. 40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ. 11,50,000) விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், மேலும் 5 மீனவர்களுக்கு மீண்டும் இலங்கை கடற்பகு திக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்த னையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தர விட்டது. விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்த டைந்தனர்.  தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனத்தில் புதுக் கோட்டை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.