states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், 3 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளனர். 3 முறை பாஜக எம்எல்ஏ வாக இருந்த கேதார் ஹஸ்ரா, பாஜகவின் கூட்டணி கட்சி யான ஏஜேஎஸ்யூவின் மூத்த தலைவர் உமாகாந்த் ரஜாக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்துள்ளனர்.

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு குறித்து உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநில அரசுகளு க்கு அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கடிதம் அனுப்பியுள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் டீசல் பேருந்துகளை இயக்குவதை தடுக்க வும், டீசல் பேருந்துகளைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கவும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.கே.ஷானிப் தெரிவித்தார். வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தேசிய மகளிர் ஆணைய தலைவராக பாஜக மூத்த தலைவர் விஜயா கிஷோர் ரஹாத்கர் செவ்வாய்க் கிழமை  பொறுப்பேற்றுக் கொண்டார்.