டிசம்பர் மாதம் பணவீக்கம் சற்று குறைந்திருப்பது நுகர்வோருக்கும் பொருளாதாரத்திற்கும் கொஞ்சம் கூட ஆறுதலை கொடுக்காது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவதால் இறக்குமதி விலைகள் கடுமையாக உயரும்.
மோகன் பகவத் அடிக்கடி கேலிக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது சமீபத்திய அறிக்கை முற்றிலும் தேச விரோதமானது. மகாத்மா காந்திக்கும், நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைமுறையினருக்கும் ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல, ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மற்றொரு தாக்குதல்.
நிற்காத ரூபாய் வீழ்ச்சி நமது ராணுவப் படைகளுக்கும் அவர்களின் தயார்நிலைக்கும் என்ன செய்யும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். உள்நாட்டில் தயாரித்ததாக கூறப்படும் பொருட்கள் கூட அதிகளவு இறக்குமதியைச் சார்ந்து தான் உள்ளது.
உ.பியில் கும்பலால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு கோரிக்கைகளை முதல்வர் ஆதித்யநாத்தின் அரசு முற்றிலும் மறுத்துள்ளதை காட்டுகிறது. இது போன்ற குற்றங்கள் அவரது சொந்த மாவட்டத்தில் நடப்பது முதல்வரின் தோல்வியல்லவா?
தலைநகர் தில்லியில் புதன்கிழமையன்று அதி காலை அதிக பனியின் காரணமாக ஏற்கனவே இருந்த காற்றுமாசுபடு மேலும் மோசமாக மாறியது. காற்றின் தரம் 344 ஆக பதிவானதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று இந்த அளவு 252 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.