states

அரசாணை 104-ஐ உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும்!

சேலம், நவ. 22 - பழங்குடியின மக்களுக்கு இனச் சான்று வழங்கிடும் அரசாணை 104-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சேலம் மாவட்டம், கருமந்துறையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு தலை மையில் வியாழனன்று நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன், மலைவாழ் மக்கள் சங்க மாநி லப் பொதுச்செயலாளர் பொன்னு சாமி, மாநிலப் பொருளாளர் ஏ.வி. சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நில உரிமைப் பட்டா வழங்க வேண்டும்! இக்கூட்டத்தில், பழங்குடி மக்க ளின் நிலங்களை பழங்குடி அல்லா தோர் வாங்கினாலோ அல்லது பத்தி ரப்பதிவு செய்திருந்தாலும் செல்லாது என்று தமிழ்நாடு அரசாணைப்படி அறிவிக்க வேண்டும்; வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் நில உரிமை பட்டா வழங்க வேண்டும்; மாநில மற்றும் ஒன்றிய அரசு இணைந்து பழங்குடி மக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தரமான வீடுகள் கட்டித்தர வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எஸ்ஐஆரை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும்!

குறிப்பாக, பழங்குடியின மக்க ளுக்கு இனச்சான்று வழங்கிடும் அர சாணை எண் 104 உடனடியாக அமல்படுத்த வேண்டும்; தமிழகத்தில் எஸ்ஐஆர் கணக்கெடுப்பை அனைத் துப் மலைப்பகுதிகளுக்கும் ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்; ஒரு மாத கால அவகாசம் கூடுதலாக வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் வசிக்கும் மலப்புலையன், வேட்டைக் காரன், ஈரோடு மாவட்ட மலையாளி மற்றும் குறவர் இனத்தின் உட்பிரிவு கள் குருமன், இனத்தின் உட்பிரிவுகள் இத்தகையோரை உடனடியாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பட்டிய லில் சேர்த்திட ஒன்றிய அரசிற்கு விரை ந்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.