states

உ.பி. முஸ்லிம் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

லக்னோ, செப்.19- உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மத  மாற்றத் தடை சட்டத்தின் கீழ் இளைஞர் ஒரு வருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. மதம் கடந்த காதல் திருமணங்களை, சங்- பரிவாரங்கள் ‘லவ் ஜிகாத்’ என்று அழைத்து  வருகின்றன. இருவேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் பேசிவிட்டாலே அவர் களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. முஸ்லிம் இளைஞர்கள், இந்துப் பெண்களை காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பின்னணியிலேயே, லவ் ஜிகா த்தை தடுக்கிறோம் என்று கூறி உ.பி. பாஜக அரசு, மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அத்துடன், கடந்த 2021, ஏப்ரல் 4- ஆம் தேதி, உத்தரப் பிரதேச த்தைச் சேர்ந்த அப்சல் என்ற 26 வயது இளை ஞரை, வேறு சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடத்தியதாக தில்லியில் கைது செய்தது. அவர்மீது கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. ஹசன்பூர் போலீசார் வழக்கை நடத்தி வந்தனர்.

அப்சல் என்ற அந்த இளைஞர் 16 வயது சிறுமியைக் கடத்தியதாகப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந் ந்தார். மேலும் புகாரில் அந்த பையன் தொடர்ந்து தன் மகளுடன் பேசிவந்துள்ளார் என்றும் தான் நடத்தும் செடிகள் வளர்ப்பு தோட்டத்திற்கு அப்சல் அடிக்கடி வந்துள் ளார் என்றும்  பெண்ணின் தந்தை கூறியிருந் தார். வேலைக்குப் போன பெண் திரும்பி  வராத நிலையில் இருவரையும் ஒன்றாக  வைத்து அக்கம்பக்கத்தினர் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார். புகாரைத் தொடர்ந்து அப்சலை தில்லி யில் வைத்துக் கடத்தல் வழக்கில் கைது செய்த உ.பி. போலீசார், அந்த இளைஞர் மீது  கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அம்ரோஹா மாவட்ட நீதி மன்றம் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப் பளித்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும், மேலும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.