சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலி ல் வாக்குப்பதிவு விவரங்கள் தொடர் பான காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக டிசம்பர் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் தேர்தல் ஆணைய செயல்முறை குறித்து எழுந்துள்ள கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
ஒன்றிய அரசு -தேர்தல் ஆணையம் கூட்டுச் சதி?
தேர்தல் நடத்தை விதிகளில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது தவிர வேறு தேர்தல் ஆவணங்களை பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு திருத்தத்தை ஒன்றிய அரசு தேர்தல் ஆணை யத்தின் (ECI) பரிந்துரையின் பேரில் கொண்டு வந்துள்ளது. தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சிகளை பகிர விரும்பவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒரு தனி நபரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த விதிகளில் இத்தகைய மாற்றம் கொண்டுவரப்பட்டது.குறிப்பிட்டு தடை செய்யப்படாத அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் அணுக முடியும் என்று விதி 93 (2) பிரிவின் கீழ் அது அனுமதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குறிப்பிடப் பட்டுள்ள தாள்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு திறந்திருக்கும் என்று தற்போது திருத்தப்பட்டுள்ள விதி கூறுகிறது. நேர்மையற்ற தேர்தல் ஆணையம்! ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்கு இன்றி யமையாத அச்சாணியாக விளங்குகின்ற ஒரு நிறு வனம் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுட னும் செயல்பட்டால் தான் அதனுடைய நம்பகத் தன்மை நிலைக்கும்.அதன் செயல்பாடும் முன்னேற முடியும்.துரதிஷ்டவசமாக இந்திய தேர்தல் ஆணையம் இதில் பின்தங்கி விட்டது. மேலும் அதன் நம்பகத்தன்மையை தனக்குத் தானே சேதப்படுத்திக் கொள்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விநோதமான நிலைப்பாடு!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மின்னணு முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் தவ றானவை. ஆனால் காவல்துறை உயர்நிலை, உள்ளூர் நிர்வாகத்தின் பாரபட்சம் மற்றும் பல்வேறு வகையான வாக்காளர் அடக்குமுறை தொடர்பான கவலைகள் பரிசீலனைக்குரியவை. அது குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் தேவை. சமீபத்தில் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தின் முடிவில் அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை விவரங்கள், இறுதியாக அறிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களோடு ஒப்பிடுகையில் வியக்கத்தக்க அளவில் அதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.வாக்கு எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இறுதி நேரத்தின் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் இறுதி புள்ளி விவரங்களில் மட்டுமே பதிவு செய்யப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் கூறுவது சரியாகக் கூட இருக்கலாம் .ஆனால் இந்த உரிமை கோரலை நிரூபித்திட எளிதான நம்பக மான வழி, இது தொடர்புடைய வீடியோ காட்சிகளை பரந்த ஆய்விற்கு அனுமதிப்பதே ஆகும். விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்கள் மற்றும் தாள்கள் குறித்த பதிவுகளை அணுக முடியும். இது தொடர்பான விதிகளில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை என தேர்தல் ஆணை யம் விளக்கம் அளித்துள்ளது.
உள் நோக்கம் நிறைந்த தேர்தல் ஆணையம்!
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொது மக்களுக்கு விவரம் அறிந்து கொள்ளும் உரிமை மறுக்கப்படும் போது,வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பதிவுகளை காண வேட்பாளர்களின் கோரிக்கைகளை அதன் அதிகாரிகள் எவ்வாறு கையாளுவார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வில்லை. விண்ணப்பதாரர்கள் எப்படியும் பதிவு களை அணுக முடியும் என்றால் தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த இந்திய தேர்தல் ஆணை யத்தின் வாதங்கள் பலவீனமாகி விடும்.விதிகளை மாற்றுவதற்கு அது எடுத்துக் கொள்ளும் காலமும் முயற்சியும் எந்த பிரச்சனைகளையும் தீர்க்கப் போவதில்லை.அதே நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றும் செயல்பாடுகளும் அதனுடைய நோக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தி இந்து தலையங்கம் (25/12/24) தமிழில்: கடலூர் சுகுமாரன்