வாஷிங்டன், பிப். 7 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் இருந்து வெளியேறுவதாக அறி வித்து, அந்த குற்றவியல் நீதிமன்றம் மீதே பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இஸ்ரேல் அரசானது, பாலஸ்தீனர் கள் மீது நடத்தி வரும் மிகக்கொடூர மான இனப்படுகொலை குறித்து, சர்வ தேச நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் தென் ஆப்பிரிக்கா வழக்கு போட்டது. இந்த வழக்கில் பல நாடுகள் இணைந்து கொண்டன. இந்த இனப்படுகொலை வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அப்போதைய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் ஆகியோரை குற்றவாளிகள் என உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவையும் பிறப்பித்தது. இந்த உத்தரவு அமெரிக்கா உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ஆப்கா னிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்களையும் சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்தது. இவ்வாறு தங்களின் போர்க் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த செவ்வா யன்று (பிப்.4) நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு பொருளாதாரத் தடைகளை வெளியிட்டுள்ளார். அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இவர்களது குடும்ப உறுப்பினர்கள், நீதிமன்ற விசாரணை களுக்கு உதவியதாகக் கருதப்படும் நபர்கள் ஆகிய அனைவரது சொத்துக்களை முடக்கவும், பயணத் தடைகளையும் அமல்படுத்தியும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.