கூகுள் குரோம் (Google Chrome), சஃபாரி (Safari), மொசில்லா ஃபையர் ஃபாக்ஸ் (Mozilla Firefox) மற்றும் மைக்ரோ சாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge) ஆகிய வெப் ப்ரவுசர்களில், இன்காக்னிட்டோ மோட் (Incognito Mode) எனும் தனிப்பட்ட தேடல் முறை வழங்கப்பட்டுள்ளது. இன்காக்னிட்டோ மோடை Enable செய்து பயன்படுத்தும் போது, நம்முடைய Browsing History, Cookies and site data மற்றும் Form inputs and autofill data ஆகியவை ப்ரவுசரில் சேமிக்கப்படுவதை தடுக்க முடியும். இருப்பினும், வலைத்தளங்களில் உங்கள் செயல்பாடுகள், இணைய சேவை வழங்குநர் (Internet Service Provider), நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் (Network Administrators) போன்ற தகவல்களை இன்காக்னிட்டோ மோட் மறைக்காது. கூடுதலாக, DNS Resolution போன்ற சில பின்னணி செயல்முறைகள், உங்கள் செயல்பாட்டின் தடயங்களை விட்டுச் செல்லக்கூடும். இது போன்ற தகவல்களை முற்றிலுமாக நீக்க, Manual ஆக சேமிக்கப்பட்ட தரவுகளை நீக்க வேண்டும். ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS) ஆகிய இயங்கு தளங்களில் சர்ச் ஹிஸ்டரியை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு பயனர்கள் Incognito Mode சர்ச் ஹிஸ்டரியை நீக்குவது எப்படி?
1) முதலில், ப்ரவுசர் Settings-க்கு சென்று “Privacy and Security” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, delete browsing data என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் Advanced என்பதை தேர்வு செய்து Browsing history, Cookies and site data, Cached images, files ஆகியவற்றை டிக் செய்து தரவுகளை நீக்க வேண்டும். 2) இதனை தொடர்ந்து கூடுதல் தனி யுரிமைக்கு, ஆப் தரவுகளை நீக்க வேண்டும். அதற்கு, மொபைலில் உள்ள Settings-க்கு சென்று Apps என்பதை தேர்வு செய்து, நீங்கள் பயன்படுத்தும் ப்ரவுசரை (Chrome or Firefox) கிளிக் செய்து, அதில் Storage & Cache என்பதை தேர்வு செய்து Clear Storage அல்லது Clear Data என்பதை கிளிக் செய்து தரவுகளை நீக்கலாம். 3) கூகுள் குரோம் ப்ரவுசருக்கு சென்று, Address Bar-இல் chrome://net-internals/#dns என்று டைப் செய்து Enter கொடுக்க வேண்டும். அதில் Clear host cache என்பதை கிளிக் செய்து சேமிக்கப்பட்ட DNS Records-ஐ நீக்கலாம்.
ஐஓஎஸ் பயனர்கள் Incognito Mode சர்ச் ஹிஸ்டரியை நீக்குவது எப்படி?
1) ஐஓஎஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள ப்ரவுசரான சஃபாரி (Safari)இல் சேமிக்கப்பட்ட ஹிஸ்டரி மற்றும் தரவுகளை நீக்க, Settings-க்கு சென்று சஃபாரியை தேர்வு செய்யவும். Clear History and Website Data என்பதை கிளிக் செய்து Confirm என்று கொடுக்க வேண்டும். 2) குரோம், ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்ற மற்ற ப்ரவுசர்களில் தரவுகளை நீக்க, ப்ரவுசரின் Settings-க்கு சென்று Privacy > Clear browsing data என்பதை கிளிக் செய்து கால அளவை All time என்று தேர்வு செய்து Browsing history, Cookies and site data, Cached images, files ஆகியவற்றை டிக் செய்து தரவுகளை நீக்க வேண்டும்.