states

திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் மலை; ஒரு மதத்திற்கு சொந்தமல்ல: பெ. சண்முகம் பேட்டி

சென்னை, பிப். 4 - ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்றார்.  அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தம் என்று இந்து முன்னணி பெயரில் ஒரு கூட்டம் பெரும் கலவரத்தை உருவாக்க திட்ட மிடுகிறது. தென் மாவட்டம் முழு வதும் பெரும் பதற்றத்தை உருவாக்கி யுள்ளது. இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜக-வின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக் குரியது” என்றார். “திருப்பரங்குன்றம் மலை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. தமி ழர்களுக்கு சொந்தமானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களுக்கு சொந்த மானது அல்ல” எனவும் உறுதிபடத் தெரிவித்த பெ. சண்முகம், “திருப்ப ரங்குன்றம் மலையில் முருகன் கோவி லும் இருக்கிறது, தர்காவும் இருக்கி றது. இஸ்லாமிய மக்களும், இந்து மக்களும் பலநூறு ஆண்டு காலமாக அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அவரவர் வழிபாட்டு இடங்களில்- வழி பாட்டு முறைகளில் வழிபட்டு வருகின்ற னர்” என்றும், “தற்போது கலவரத்தை உருவாக்கி மதுரையின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்கிற திட்டத் தோடு ஆர்எஸ்எஸ் பாஜக - கூட்டம் முயற்சிக்கிறது” என்றும் குற்றம் சாட்டினார். “ஆனால், இதை முற்றிலும் முறி யடிக்க வேண்டும் என்பதில் மதச்சார் பற்ற சக்திகள் ஒருமித்து இருக்கின் றன” என்ற பெ. சண்முகம், “ஒரு குறிப் பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு இடத்தை ஒப்படைக்க வேண்டும் என் கிற பிரிவினைவாத கோரிக்கைக்கு ஒருபோதும் மதச்சார்பற்ற கட்சிகள் துணைபோகாது” என்று தெரிவித்தார். “திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி களை இணைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத் தை நடத்தியது. அந்தக் கூட்டம், இந்தப் பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடன டியாக தலையிட்டு, மக்களின் அமைதி யான வாழ்வுக்கு கடுகளவு சேதமும் ஏற்படாத நிலைமையை உருவாக்க வலியுறுத்தியது. அதன்படி அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.