articles

img

படிப்பது வேதம்! கக்கத்தில் கன்னக் கோல்!!

மோடி அரசின் மற்றுமொரு பட்ஜெட்! வழக்கம்போல லட்சக்கணக் கான கோடிகளில் அறிவிப்புகள். நம் வாய்களில் நுழையாத பெயர்களில் திட்டங்கள்.ஒவ்வொரு முறையும் தவறாமல் உச்சரிக்கப்படும் திருக்குறள். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியையாக கண்டிப்புடனும் கறா ராகவும் எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, தனக்கு மட்டுமே பொருளாதாரம் தெரியும் என்ற அதிகார தோரணையில் பேசுகிற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர்களது ஒவ்வொரு அறிவிப்பி னையும் முதல் முறையாக அறிவது போல வியப்பும் பெருமிதமுமாக முகபாவம் காட்டி மேஜையைத் தட்டிக்கொண்டே இருக்கும் பிரதமர். 

பொது ஜன பிரமை  மாயத் தோற்றம்

தலைப்புச் செய்திகளை கைப்பற்றி, முக்கியச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ள மோடிமயமாக்கப்பட்ட ஊடகங்களின் கையில் ‘லட்டு’ போல ஒரு செய்தி. “இனிமேல் ₹12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரு மான வரி கட்ட தேவையில்லை” என்ற அந்த அறிவிப்பை  இந்தியாவில் உள்ள அனைத்து காட்சி மற்றும் செய்தி ஊடகங்களும் 48 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருந்தன. எங்கு பார்த்தாலும் அதே பேச்சு. தொலைக்காட்சிகள் அனைத்திலும் அதனைப் பற்றியே விவாதங்கள். அந்த அறிவிப்பை புகழ்ந்தே பேட்டிகள். பட்ஜெட்டைப்பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வேறு எதுவும் இல்லை என்பதைப் போன்ற ஒரு பொதுஜன பிரமையை உரு வாக்கியதில் மோடி அண்ட் கம்பெனி ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதும் உண்மை.

 அந்த மாயத்தோற்றம் சரியா? பட்ஜெட் ஆவ ணங்கள் மூடி மறைத்திருக்கும் அவலங்களும், அசிங்கங்களும், அழுகிப் போன பொருளாதார ரணங்க ளும், அவைகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படக் கூடிய இழப்புகளும் வேதனைகளும் எப்போது வெளிச் சத்திற்கு வரும்? வேத புத்தகத்தைப் படிக்கின்றவரைப் பார்த்து பரவசமாக நிற்கின்ற மக்களுக்கு, அவர் கைகளில் வேதப் புத்தகம் மட்டும் இல்லை, அவரது கக்கத்தில் கன்னக்கோலும் இருக்கிறது என்பதை நாமாவது சொல்லி வைப்போம்.

ஒதுக்கப்பட்ட  நிதியும் குறைப்பு

மோடி அரசின் கடந்த கால செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி புதிதல்ல. அவர் எப்போதும் சொன்னதைச் செய்ததில்லை. செய்யப் போவதை சொன்னதில்லை. இதற்கு ஓராயிரம் உதார ணங்களை சொல்ல முடியும். இதற்கு அவரது அரசின் பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல. பட்ஜெட்டில் அறி விக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் அப்படியே செலவு செய்யப்படும்  என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை எடுத்துக்கொள்வோம். அரசு அறிவித்த வருவாயைவிட, அரசு பெற்ற வருவாய் ₹42000 கோடி  குறைவு. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மதிப்பீடு செய்யப் பட்ட வரி வருவாயை விட ₹27000 கோடி குறைவு.

திட்டச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி யில் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக எவ்வித முன்னறி விப்பும் இன்றி குறைத்துக் கொண்டார்கள். மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவு செய்யவே இல்லை. இந்த பற்றாக் குறையை சரிக்கட்ட எந்த துறையில் மோடி அரசு கைவைத்தது என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. 

சுகாதாரம், கல்வி,சமூக நலம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி போன்ற முக்கிய மான துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளைத்தான் மோடி அரசு குறைத்தது. அதுமட்டுமின்றி பட்டியல் இன பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியல் இன -பிற்படுத்தப்பட்ட இளம் சாதனையாளர்க ளுக்கான சிறப்புத் திட்டங்கள், பட்டியல் இன மாணவர்க ளுக்கான கல்வி உதவித் தொகை, பழங்குடி மக்க ளுக்கான சிறப்புத் திட்டங்கள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத்தான் மோடி அரசு குறைத்தது.

கடந்த ஆண்டு மிகப்பெரிய விளம்பரங்களுடன் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு இந்த ஆண்டு போதிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அவைக ளுக்கான ஒதுக்கீட்டின்படி செயல்படுத்தப்படுமா என்பது நமக்கு அடுத்த ஆண்டுதான் தெரியவரும்.

ரூ.1 லட்சம் கோடியை  எப்படி ஈட்டும்?

ஆண்டுக்கு ₹12லட்சம் வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற அறிவிப்பை அத்தகைய வருமானம் உள்ளவர்கள் வரவேற் பார்கள். நாமும் வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்க ளில் 7 கோடி மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதாகவும் அதில் இரண்டு கோடி நபர்கள் இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்றும் சொல்கி றார்கள். அதனால் அரசுக்கு ₹1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். இந்த ஒரு லட்சம் கோடியை எந்த வருவாய் மூலம் ஈடுகட்டப் போகிறது என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை.

நம்மால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். மோடி அரசு இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ் வரர்களுக்கும், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கும் எந்த கூடுதல் வரியையும் விதிக்கப்போவ தில்லை. ஏற்கனவே அவர்கள் கட்டிவந்த வரிகளை குறைத்து, அவர்களுக்கு பல சலுகைகளை தொடர்ந்து  செய்து வரும் மோடி அரசு எப்படி அவர்கள் மீது புதிய வரிகளை விதிக்க முடியும்? ஆண்டுக்கு ₹4500 கோடியினை பெரும் முதலாளிகளிடம் இருந்து நன் கொடையாக திரட்டும் பாஜகவின் அரசு அவர்கள் மீது வரி விதிக்காது என்பது நமக்கும் தெரியும். இந்த அரசில் வரி கட்டுவதற்கென்றே பிறந்து வாழும் மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலும், நடுத்தர வர்க்கத்தி லும் வாழும் மக்கள் தாம். அவர்கள் அன்றாடம் பயன் படுத்தும் அனைத்துப் பொருட்களின் மீதும் விதிக்கப் படும் வரிகள் தாம் இன்று இந்திய அரசின் கோரப் பசிக்கு தீனியாக உள்ளது.

இரண்டு கோடி மக்களுக்கு மட்டுமே பயன்படும்?  ஒரு அறிவிப்பினை செய்துவிட்டு அதனால் இந்தியா வின் பொருளாதாரமே நிமிர்ந்து உட்கார்ந்து விடும் என்று பேசுகிற இவர்கள் யாரை ஏமாற்ற நினைக் கின்றனர்?

கார்ப்பரேட்டு வரி குறைந்து மூலதனமும் வரவிகடந்த பத்து ஆண்டுகளாக தொழிலாளர்கள் பெற்றுவரும் ஊதியங்களில் மாற்றம் இல்லை என்பதை அரசின் பொருளாதார அறிக்கையே சொல்கி றது. அதே அறிக்கை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத பெரும் லாபங்களை இந்திய கார்ப்பரேட் கம்பெனிகள் இந்த ஆண்டு குவித்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும் எந்த நிறுவனமும் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியங்களையும், சலுகைகளையும் கூட்டவே இல்லை என்பதையும் தெரிவிக்கிறது. இவர்களுக்கு மேலும் மேலும் சலுகை கள் வழங்குவதன் மூலம் புதிய முதலீடுகள் வரும், வேலை வாய்ப்புகள் பெருகும், ஊதிய விகிதங்கள் கூடும் என்றெல்லாம் சொல்லி அவர்களுக்கு லாபம் தரும் வகையில் ரூபாய் இரண்டு லட்சம் கோடி, கார்ப்ப ரேட் வரிச் சலுகையை மோடி அறிவித்தார். ஆனால்  கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டிய வரிதான் குறைந்ததே தவிர எந்த புதிய முதலீடுகளும் வரவில்லை. வேலை வாய்ப்பும் பெருகவில்லை. இந்தியாவில் முதன் முறையாக மோடி ஆட்சியில் மட்டும்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டும் வரிகள் குறைவாகவும்,தனி நபர் கட்டும் வரிகள் அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.ல்லை

உறிஞ்சப்படும்  ஏழைகளின் இரத்தம்

நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு ₹150 க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இந்த மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று பாஜக நண்பர் கள் நாட்டுக்குச் சொல்ல வேண்டும். உணவுப் பொ ருட்களின் விலைவாசிகள் விண்ணைத் தொடு கின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கள் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. கல்வி, மருத்துவம் போன்ற வாழ்க்கையின் அடிப்ப டைத் தேவைகளுக்கு அவர்களிடம் பணம் இல்லை. கடன் சுமையால் உயிர் வாழவே போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு கடன் நிவாரணமும் இல்லை.அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான உத்தர வாதமும் இல்லை. 

சிறு தொழில்களுக்கு  வரிச்சலுகை கேட்டால்.

சிறு, குறு தொழில்களுக்கு சலுகை காட்டுங்கள் என்று கேட்டால் ₹500 கோடி வரவு செலவு செய்யும் நிறுவனங்களையும் சிறு தொழில் நிறுவனங்கள் என்று அறிவிக்கும் மோடி அரசின் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? சிறுதொழிலுக்கான சலுகைகளை யெல்லாம் அந்த பெரிய நிறுவனங்களே கைப்பற்றிக் கொள்ளும் என்கிற அடிப்படை உண்மை கூட இந்த அரசுக்குப் புரியாதா?

தென் மாநிலங்கள்  புறக்கணிப்பு

இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக விளங்குகின்ற தமிழ் நாடு, கர்நாடகம், அனைத்து சமூக வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதல் இடத்தை பெற்றி ருக்கின்ற கேரளா போன்ற தென் மாநிலங்கள் ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்ன நியாயம்?

பட்ஜெட் தயாரிக்கும் உயர்மட்ட 90 அதிகாரிகளில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் இல்லை என்று சொல்கிறார்களே! இதுதான் சமூக நீதியா?

யாருக்கு வரிச் சலுகை?

உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரிச் சலுகை என்று பெரிதாக அறிவித்தார்கள். ஆனால் உள்ளே போய் பார்த்தால் இறக்குமதி செய்யப்படும் பிளாட்டினம், தங்க நகைகள், வைரம்,விலை உயர்ந்த நவரத்தினங்கள் - இவற்றுக்கெல்லாம் வரிச் சலுகை அறிவித்துள்ளீர்களே! அது யாருக்காக?

எலான் மஸ்க்குக்காக எலெக்டிரிக் கார்களின் மீதான வரி குறைப்பு.. டிரம்பை திருப்திப்படுத்த அமெ ரிக்க இறக்குமதி ஹார்லி மோட்டர் சைக்கிளுக்கு வரிகுறைப்பு....

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றவர்க ளுக்கு வரிச் சலுகை! ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டிகளை தள்ளுபடி செய்யக்கூடாதா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஒதுக்கீடு கூட குறைந்துகொண்டே வரு கிறதே! இது யாருக்கான அரசு?

உற்பத்தியைக் கூட்டாத,வேலை வாய்ப்புகளைப் பெருக்காத, அத்தியாவசியப் பொருட்களின் விலைக ளை குறைக்காத, விவசாயிகளின் துயர் நீக்காத, ஏழைக ளின் கண்ணீர் துடைக்காத இந்த பட்ஜெட்டால் யாருக்கு பயன்?