articles

img

அவரது நினைவுகள் அழியாது!

அவரது நினைவுகள் அழியாது! 

ஜூலை 17 : தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரண உறுப்பினராக தன் அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன், தனது பணியால் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராக மாநிலக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, மத்தியக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். கட்சியின் தத்துவ மாத இதழான ‘மார்க்சிஸ்ட்’ ஆசிரியராக நீண்டகாலம் செயல்பட்டார். கட்சிக் கல்வியை போதிக்கும் ஆசிரியராகச் சிறந்து விளங்கினார். ஏராளமான கட்டுரைகளை எழுதிக் குவித்தார். இடஒதுக்கீடு தொடர்பான பிரசுரம், இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும் நூல் போன்றவை அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய கய்யூர் தியாகிகள் குறித்த நாவலின் மொழி பெயர்ப்பான ‘நினைவுகள் அழிவதில்லை’ மிகவும் புகழ்பெற்றது. கட்சிக் கிளைகள் கட்சியின் அடித்தளமாகும். அவை எந்தளவு பலமாய் இருக்கிறதோ அந்தளவுக்கு கட்சியும் வலுவாக இருக்கும் என்பதற்காக தன் வாழ்நாள் இறுதிவரை உழைத்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம். பெரணமல்லூர் சேகரன்