states

img

மதச்சார்பற்ற சக்திகளை முழுமையாக அணிதிரட்டி முறியடிப்போம்!

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு வரைவுத் தீர்மானத்தில் உறுதி

புதுதில்லி, பிப்.4 - மோடி அரசின் பதினொரு ஆண்டு ஆட்சிக் காலத்தில் வலதுசாரி, மதவாத, அதிகாரத்துவ சக்திகள் நவீன - பாசிசப் போக்குடன் வலுப்பெற்றுள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள மதச்சார்பற்ற சக்தி களின் பரந்த ஒற்றுமையை உரு வாக்க வேண்டியது அவசியம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நவீன - பாசிச அரசின் அடையாளங்கள்

மோடி அரசின் ஆட்சியில் தெளி வாகத் தெரியும் நவீன - பாசிசப் போக்குகளை இந்த வரைவு ஆவ ணம் விரிவாக பட்டியலிடுகிறது: lஇந்துத்துவ சக்திகளுடன் பெரும் முதலாளித்துவ வர்க்கம் கூட்டணி வைத்துள்ளது. lராமர் கோவில், ஒரே சிவில் சட்டம் போன்ற மதவாத நிகழ்ச்சிநிரல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள் ளது. lசிறுபான்மையினர் மீது தொடர் வன்முறைகள் அரங்கேற்றப்படு கின்றன. lமத்திய புலனாய்வு நிறுவனங் களை பயன்படுத்தி எதிர்க் கட்சிகள் அடக்கப்படுகின்றன. lமாநில உரிமைகள் பறிக்கப்படு கின்றன. lஆளும் கட்சிக்கு ஆதரவான சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேசிய சொத்துக்கள் தாரை வார்க்கப்படுகின்றன.

எதிர்கொள்வதற்கான அரசியல் உத்தி

இந்த நவீன - பாசிச ஆட்சியை எதிர்கொள்ள பின்வரும் அரசியல் உத்திகளை கட்சி கையாள வேண்டும் என்று வரைவு ஆவணம் வலியுறுத்துகிறது: “பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்ட ணியை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதற்கு இந்துத்துவ கருத்தியலுக்கும், மதவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிரான தொடர் போராட்டம் தேவை.  இதற்காக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்” என்று வரைவு ஆவணம்  வலியுறுத்துகிறது. “இந்துத்துவ நவீன - தாராள வாத ஆட்சிக்கு எதிரான போராட்டங் களின் வெற்றிக்கு சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேச்சை யான வலிமை, வளர்ச்சி அவசியம். இந்துத்துவ மதவாதத்திற்கு எதி ரான போராட்டத்தையும், நவீன - தாராளவாத கொள்கைகளுக்கு எதி ரான போராட்டத்தையும் ஒருங்கி ணைக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்க்கப் போராட்டங்களின் அவசியம்

“மோடி அரசுக்கும் பாஜக வுக்கும் எதிரான போராட்டம், கார்ப்ப ரேட் ஆதரவு நவீன -தாராளவாத கொள்கைகளுக்கு எதிரான வர்க்க மற்றும் மக்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த  கொள்கைகள் உழைக்கும் மக்களின் சுரண்டலைத் தீவிரப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை நிலைமைகளையும் மிக  மோசமாக பாதித்துள்ளன. கார்ப்ப ரேட் முதலாளித்துவம், தேசிய சொத்துக்களின் கொள்ளை, மிகப்  பெரிய அளவிலான தனியார்மய மாக்கல் ஆகியவற்றை எதிர்ப்பதில் கட்சி முன்னணியில் நிற்க வேண்டும்” என்று வரைவு ஆவணம் தெளிவு படுத்துகிறது. சமூக நீதிப் போராட்டங்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன், சாதி ஒடுக்குமுறை, பாலின பாகுபாடு கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களையும் இணைத்து முன்னெடுக்க வேண்டும் என்றும், பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசி கள், சிறுபான்மையினர் ஆகி யோரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. மாற்று அரசியல் “இந்திய சூழலுக்கு ஏற்ற சோச லிசமே மாற்று” என்ற கருத்தை முன்னிறுத்தி, இளைஞர்களிடையே பரந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வரைவு ஆவணம் அறைகூவல் விடுக்கிறது.

மதுரை மாநாட்டில்  இறுதி முடிவு

இந்த வரைவு ஆவணம் தற்போது நாடு முழுவதும் உள்ள  மார்க்சிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் களின் விவாதத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், மார்ச் 5க்குள் மத்தியக்குழு அலுவலகத்திற்கு கிடைக்கும் வகையில் திருத்தங் களை அனுப்பலாம். அந்தத் திருத்தங்களை இறுதி செய்யப்பட்டு அவற்றுடன் வரைவு தீர்மானம் ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறும் 24வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும்.