சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன்
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் மாசுபட்டுள்ளது. உண்மையான பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. கும்பமேளாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கான ஏற்பாடும் இல்லை.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான உயர்மட்ட நெடுஞ்சாலை போன்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் திட்டங்களை முழுமையாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் வளர்ச்சியை புறக்கணிக்கிறது ஒன்றிய அரசு.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள ஒரே கட்டடத்திலிருந்து மட்டும் 7,000 வாக்குகள் பதிவு செய்திருக்கும் அற்புதம் நடந்திருக்கிறதாம். இது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் இது தேர்தல் ஆணையத்தின் ஷீரடி அற்புதம் ஆகும்.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மணீஷ் தோஷி
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் ஒன்றிய, குஜராத் பாஜக அரசுகள் தோல்வியடைந்துள்ளது. இதனை மறைக்கவே பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்பி விடப்படுகிறது. எத்தனை நாள் தான் பாஜக இத்தகைய திசை திருப்பும் வேலையை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.