tamilnadu

img

சிபிஎம் ஆந்திர மாநிலச் செயலாளராக வி.சீனிவாச ராவ் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆந்திரப் பிரதேச மாநில 27ஆவது மாநாடு நெல்லூரில் ஜனவரி 1ஆம் தேதி மாபெரும் பேரணியு2டன் தொடங்கி யது. அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் பிருந்தா காரத், எம்.ஏ.பேபி, பி.வி.ராக வலு, மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ்  ஆகியோர் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி னர். மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 3 அன்று வி.சீனிவாச ராவ் மாநிலச் செய லாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் 49 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும், 15 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. மதுரையில் நடை பெறும் அகில இந்திய மாநாட்டிற்கான பிரதி நிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.