headlines

img

நாம் செல்லும் சாலை நமதல்ல என்றறிக!

‘வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு’ என்பது திருக்குறள். அரசன் குடிகளிடம் முறைகடந்து வரி வசூலிப்பது கையிலே வேலோடு நிற்கும் கள்வன் அனைத்தை யும் கொள்ளையடிப்பதற்கு சமமாகும் என்பது இதன் பொருள். 

ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் வரி மேல் வரி போட்டு கொள்ளையடித்து வரும் நிலையில், இரவு, பகல் 24 மணி நேரமும் அடிக்கும் கொள்ளை யின் ஒரு வடிவம் தான் சுங்கச் சாவடி என்பதா கும். உண்மையில் சுங்கம் என்கிற பெயரில் மக்களை சாவடித்து வருகிறது ஒன்றிய அரசு. 

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்ட ணம் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடப் பட்டுள்ள சாலைகள் மூலம் அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும் கேள்வி இல்லை. உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சாலை அமைக்க எவ்வளவு முதலீடு செய்தன, பராமரிப்புச் செலவு எவ்வளவு, இதுவரை வசூலிக் கப்பட்ட தொகை எவ்வளவு என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 72லிருந்து 90ஆக உயர்த்தப்போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிப்ப தாக உள்ளது. நாட்டில் 1.46லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலையில் 1,041 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 72 தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. 

60கி.மீ., இடைவெளியில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. 60 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் அகற் றப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதை அவரே மறந்துவிட்டார் போலி ருக்கிறது. 

அதேபோல மாவட்டத்திற்கு ஒரு சுங்கச் சாவடி என்பதும் பின்பற்றப்படுவதில்லை. சாலை களை பராமரிப்பதற்கு வகுக்கப்பட்ட விதிகளும், வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு செய்து தரப்பட வேண்டிய வசதி குறித்த விதிகளும் ஏட்டில் மட்டுமே இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது மட்டும் தவறாமல் நடந்து கொண்டேஇருக்கிறது. 

சுங்கக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் விலைவாசி உயரும் நிலையில்  தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் அனை த்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. அனைத்துப் பகுதி மக்க ளிடமும் பிக்பாக்கெட் அடிப்பது போல கட்டணம் என்ற பெயரால் பறிப்பது மக்களுக்கு மட்டுமின்றி தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கும் பெரும் கேடாக உள்ளது. ஆனால் ஒன்றிய மோடி அரசு க்கு இதுகுறித்து கவலையில்லை. நாமிருக்கும் நாடு நமதென்று அறிவோம் என்றார் மகாகவி பாரதி. ஆனால் நாம் செல்லும் சாலை நம தில்லை என்கிறது மோடி அரசு.