states

img

வங்கதேசத்திலிருந்து அசாம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்!

புதுதில்லி, அக். 17 - வங்கதேசத்தில் இருந்து அசா மிற்கு புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற் கான ‘6ஏ’ சட்டத் திருத்தம் செல்லும் என்று டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 4:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது. அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜே.எம். பர்திவாலா மட்டும்,  ‘குடியுரிமைச் சட்டப்பிரிவு 6ஏ’ இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாக கூறியுள்ளார். அசாம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட பிரிவு 6ஏ! கடந்த 1985 ஆகஸ்ட் 15 அன்று மேற்கொள்ளப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வகை யில், 1955-ஆம் ஆண்டின் குடியுரி மைச் சட்டத்தில், ஒன்றிய அரசு ‘6ஏ’ திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த 6ஏ பிரிவானது, 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25-க்கு இடைப் பட்ட காலத்திற்குள் வங்க தேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கு அசாம் குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்தது. அவர்கள்,  பிரிவு 18-இன் கீழ் இந்திய குடி யுரிமை பெறுவதற்கு பதிவு செய்ய லாம் என்று கூறியது. கூடவே, இவ்வாறு குடியுரிமை பெற்றவர்கள் முதல் 10 ஆண்டு களுக்கு இந்திய தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற விதியும் சேர்க்கப்பட்டு இருந்தது.

அரசியலமைப்பை  மீறுவதாக வழக்கு!

இந்நிலையில், “குடியுரிமைச் சட்டத்தின் ‘6ஏ’ பிரிவின் மூலம்,  அசாமின் பூர்வகுடி மக்கள் சிறு பான்மையினர் ஆக்கப்படுவதாக வும், கலாச்சாரம் பாதிக்கப்படுவ தாகவும் கூறி, 6ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டும் என 2012-ஆம்  ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு கள் தொடரப்பட்டன. இந்திய குடி மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை இந்த 6ஏ மீறுகிறது; மறுக்கிறது; அரசியலமைப்பு பிரிவு கள் 325, 326-இன் கீழ் அசாம் மக்களின் அரசியல் உரிமையை யும் மறுக்கிறது” என்று அந்த மனுக் களில் கூறப்பட்டன. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி கள் சூர்ய காந்த், எம்.எம். சுந்த ரேஷ், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

உச்சநீதிமன்றத்தின்   5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

மூத்த வழக்கறிஞர்கள் சி.யு. சிங்,  சஞ்சய் ஹெக்டே, கபில் சிபல், ஷியாம் திவான் உள்ளிட்டோரும், ஒன்றிய அரசின் தரப்பில் ஆர்.  வெங்கடரமணி, துஷார் மேத்தா  ஆகியோரும் ஆஜராகி வாதங் களை வைத்தனர். அதைத்தொட ர்ந்து, கடந்த 2023 டிசம்பர் 12 அன்று நடந்த விசாரணையின் முடிவில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வியாழனன்று (அக்.17) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தாமும், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஏனைய 3 நீதிபதி களும் பெரும்பான்மையாக வழங்கிய தீர்ப்பை தலைமை நீதி பதி டி.ஒய்.சந்திரசூட் வாசித்தார். மனிதநேய அடிப்படை யிலான தீர்வைத் தரும் ‘6ஏ’ அதில், “குடியுரிமைச் சட்டத்தில்  திருத்தம் கொண்டு வந்து பிரிவு 6ஏ-வை சட்டமாக்குவதற்கு நாடாளு மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அசாம் ஒப்பந்தம் என்பது சட்ட விரோத குடியேற்றங்களுக்கு அரசி யல் ரீதியான தீர்வை அளிக்கிறது பிரிவு 6ஏ சட்டரீதியான தீர்வை  அளிக்கிறது. மனிதநேய பிரச்ச னைகளை கருத்தில்கொண்டு உள்ளூர் மக்களை பாதுகாப்ப தற்காக பிரிவு 6ஏ கொண்டுவரப் பட்டது. வங்கதேச நாடு உரு வாக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக பெரும் அளவில் குடி யேறியவர்களால் அசாம் பெரும் பிரச்சனையைச் சந்தித்தது. இந்தப் பிரிவு 6ஏ என்பது இந்த தனித் தன்மை வாய்ந்த பிரச்சனைக்கு அர சியல் தீர்வாக அமைந்திருக்கிறது.

அரசியலமைப்பு 29(1) மீறப்படவில்லை

ஒரு மாநிலத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் இருப்பதால், அரசியலமைப்பின் 29(1) வது பிரி வின்படி மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற் கான அடிப்படை உரிமை மீறப் பட்டதாக அர்த்தமில்லை. ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவர்  இருப்பதாலேயே தங்கள் சொந்த மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியாது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. அவர்களின் வாதம் அரசியலமைப்பின் முகவுரையில் பொதிந்துள்ள சகோ தரத்துவக் கொள்கையை மீறுவதாக உள்ளது. அண்டை  வீட்டாராக யார் இருக்க வேண்டும் என தீர்மானிப்பதை சகோதரத்துவமாக புரிந்து கொள்ள முடியாது.

21-ஆவது பிரிவும் மீறப்பட்டதாக கூறமுடியாது

1966 ஜனவரி 1-க்கு முன் அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோர் இந்திய குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். 1966 ஜனவரி 1 மற்றும் 1971 மார்ச் 25க்கு இடையில் அசாமிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர், தகுதியின் அளவுகோல்களை பூர்த்தி  செய்யும் பட்சத்தில் இந்திய குடியுரிமை பெற உரிமை உண்டு. 1971 மார்ச் 25 அல்லது அதற்குப் பிறகு அசாமிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் என அறிவிக்கப்பட்டு, அவர்கள் கண்டறியப்பட்டு,  தடுத்து வைக்கப்படுவதுடன், நாடு கடத்தப்படுவார்கள். இதுதொடர்பான உத்தரவுகள் தெளிவாக உள்ளன. எனவே, அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவு மீறப்படுவதாக கூற முடியாது” என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதுமே அமல்படுத்தலாம்! மேலும் “இந்த குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-வை இதர பகுதிகளுக்கும் அமல்படுத்தலாம்; இது அசாம் மாநிலத்துக்கு மட்டுமானதல்ல!” என்றும் நான்கு நீதிபதிகளும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். நீதிபதி ஜே.பி. பர்திவாலா மட்டும், “குடியுரிமை சட்டத்தின் ‘பிரிவு 6ஏ’ அரசியல் சட்டத்துக்கு எதிரானது”  என்று கூறினார். இதையடுத்து, 4:1 என்ற அடிப்படையில், “குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும்” என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பாக அமைந்துள்ளது.