போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெரிசல் வரி கட்டண வசூல் பாஜக கூட்டணி அரசின் கொடிய திட்டம்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் நாளுக்கு நாள் போக்கு வரத்து பிரச்சனை அதிகரித்து வரு கிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் நெரிசல் வரி மற்றும் வாகனங்கள் வாங்க புது கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற திட்டமிடலால் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கான நகரமாக உரு வாகியுள்ள மும்பையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இத னால் நடுத்தர மற்றும் தொழிலாளி வர்க் கத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக் கப்பட்டு வரும் சூழலில் அவர்களிடமே நெரிசல் வரி வசூலிப்பது முட்டாள் தனமா னது என பாஜக அரசாங்கத்தின் மீது கடு மையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மும்பை நகரில் வேலைக்காக குடி யேறும் மக்களின் எண்ணிக்கை மிக அதிக ளவில் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. மேலும் திட்டமிடப்பட்ட பார்க்கிங் வசதி கள் இல்லாததும் வாகனங்களை பலரும் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். அதிகமக்கள் தொகைக்கு ஏற்றவாறு வலுவான பொதுப் போக்குவரத்து வசதி கள் இல்லை என்பதும் தனி நபர் வாக னப்பயன்பாட்டுக்கு முக்கிய காரணமா கும். இது போக்குவரத்து பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தி விடுகிறது. இந்நிலையில் நெரிசல் வரி விதிப்பது எனவும் அதுமட்டுமின்றி புதிய வாக னங்களை வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நெரிசல் வரி அல்லது கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மும்பையில் கடந்த 2024 இல் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரி யாக 29.26 நிமிடங்கள் ஆனது. மும்பை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 2,300 வாகனங்கள் என்ற அளவுக்கு வாகன நெரிசல் உள்ளது குறிப்பிடத் தக்கது.
மோகன் பகவத் தேசத் துரோக குற்றம் செய்துள்ளார்: ராகுல்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக வத் தேசத் துரோகம் செய்து விட்டார் என எதிர்கட்சித்தலை வர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித் துள்ளார். இந்தியா 1947 ஆண்டில் சுதந்திரம் பெறவில்லை. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளே இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் என ஆர்எஸ்எஸ் அமைப் பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள் ளார். மேலும் ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளையே உண்மையான சுதந்திர தின மாக கொண்டாட வேண்டும் என்றும் பக வத் மக்களிடையே மதவெறிப் பிரச்சா ரத்தை திணித்து இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் சுதந்திரத்திற் காக இன்னுயிர் நீத்த தியாகிகளையும் அவமதித்துள்ளார். இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, மோகன் பக வத்தின் பேச்சு தேசத்துரோக குற்றம். இந்திய சுதந்திரத்தின் சின்னமான அரசி யலமைப்புச் சட்டத்தை மோகன் பகவத் அவமதித்துவிட்டார் எனவும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு தேசி யக்கொடி மீது மரியாதை இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அதானி நிறுவனத்துக்கு அபராதம்
இந்தியாவில் அல்லது வெளிநாடு களில் எந்த தொழில் துவங்கினா லும் ஊழல், இயற்கை வளங் களை சூறையாடுதல் என பல குற்றச் சம்பவங்களிலும் அதானி நிறுவனம் ஈடு பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2022 இல் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏலம் எடுத் தது. 2022 இல் இந்த அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களுக்கான குறைந்த பட்ச வெளியீட்டு கடமைகளின்படி, 26 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைவரி சையில் அலைக்கற்றைகளை வாங்கிய வர்கள், ஒரு வருடத்திற்குள் சேவைப் பகு தியில் வணிகச் சேவைகளைத் துவங்க வேண்டும். ஏலம் எடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த சேவையை அதானியின் தொலைத் தொடர்பு நிறு வனம் துவங்கவில்லை. இதன்காரண மாக அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் மீது ஒன்றிய அரசின் தொலைத் தொடர்புத்துறை புகார் அளித்துள்ளது. முதல் 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ.1 லட்சமும், அடுத்த 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டு முதல் அதானி நிறு வனத்தின் மீது 2 முறை அபராதம் விதிக் கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும் 5 ஜி சேவையை துவங்கு வதில் ஏன் அதானி நிறுவனம் இவ்வளவு தாமதம் செய்கின்றது என கேள்வி எழுப்பி பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அதானி நிறுவனம் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவு
சென்னை, ஜன.14- தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவல கங்களுக்கு ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால், ஜன 20 ஆம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக் கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், 20.01.2025 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100- க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை
இராமேஸ்வரம்,ஜன.15- தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு அபராதம் சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது. படகுகளிலிருந்த 8 மீனவர்களை கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் புதன்கிழமையோடு நிறை வடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 6 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 2 பேருக்கு தலா ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வாட்ஸ் ஆப் அழைப்பால் ரூ.11 லட்சம் பணம் திருட்டு
திருச்சிராப்பள்ளி, ஜன.15 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கரூர் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (43). இவரது செல்போனுக்கு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி 3 மாதங்கள் வரை பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சம் வரை மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஒரு கட்டத்தில் முதலீட்டுக்கான வட்டியை கேட்டபோது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, நடந்த சம்பவம் குறித்து மாநகர ‘சைபர் கிரைம்’ காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன.21, 27 இல் யுஜிசி நெட் தேர்வு
சென்னை,ஜன.15- யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு. க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடை பெறும் என்று அறிவித்துள்ளது . மற்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ugcnet.nta.ac.in.) தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.