states

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் மத உணர்வுகளை புண்படுத்தாதாம்!

பெங்களூரு, அக். 16 - மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று  கோஷமிடுவது மத உணர்வுகளை புண் படுத்துவது ஆகாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் விசித்திரமான கருத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு  நேரத்தில் நுழைந்த இரண்டு நபர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்ட தாகவும், மத ரீதியாக அச்சுறுத்தும் வகை யில் பேசியதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் மத உணர்வு களை புண்படுத்துதல், அத்துமீறி நுழை தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மசூதி யில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களையும் கைது செய்தனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட வர்கள் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் வேண்டுமென்றே அவமதிப்பதற்காக பதியப்படுவது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் என்று புரியவில்லை.  அந்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக புகார்தாரரே தெரி வித்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். மேலும், “295ஏ பிரிவின் கீழ் எந்த வொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.  அமைதியைக் கொண்டு வருவ திலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்பதிலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் 295A பிரிவின் கீழ்  குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளை கண்டறியாமல், மனுதாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது துஷ்பிரயோகம் மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” என்றும் நீதிபதி தெரி வித்துள்ளார்.