states

திசைமாறியது காற்றழுத்தத் தாழ்வு; சென்னைக்கு ஆபத்து நீங்கியது!

சென்னை, அக். 16 -  தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திராவை நோக்கி திசைமாறியதன் காரணமாக, சென்னைக்கு வரவிருந்த அதிகனமழை ஆபத்து நீங்கியுள்ளது. எனினும், காற்றழுத்த தாழ்வு கரையைக் கடக்கும் வரை ரெட் அலர்ட்  எச்சரிக்கை தொடர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி யில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது.  அதாவது, புயல் சின்னம் வட தமி ழகத்தை நோக்கி நகர்ந்து வருவதும், அது புயலாக உருமாறினால் சென்னை – புதுவை - தெற்கு ஆந்திரம் இடையே கரையை கடக்கலாம் என்றும், அப்போது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் அதிகனமழையைப் பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதற்கேற்ப அக்டோபர் 14 இரவு  முதலே கனமழை பெய்து வந்த நிலை யில், அக்டோபர் 16 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யிருந்தது. ஆனால், சென்னையின் கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கி.மீ தொலை வில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வட மேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி  நகர்ந்ததால், திருவள்ளூர், சென்னை,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களுக்கு புதன்கிழமை (அக். 16) விடுக்கப் பட்டிருந்த அதிகனமழை ஆபத்து விலகியுள்ளது. தற்போது மணிக்கு 17 கி.மீ வேகத்தில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கிச் செல்லும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல மானது, அக்டோபர் 17 அன்று புதுச்சேரி  மற்றும் நெல்லூர் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால், ஆந்திரா வின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. நெல்லூர், திருப்பதி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் 20 செ.மீ. அளவுக்கு அதிகனமழையும் கொட்டி வருகிறது.

மிதமான மழை தொடரும்

தமிழகத்திற்கு அதிகனமழை ஆபத்து நீங்கினாலும், வடகிழக்குப் பருவழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர், திருவண்ணா மலை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான அல்லது மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடல் சீற்றமாக இருக்கும் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் கடல் சீற்றத்துடனும், மிகக் கொந்தளிப்பாக வும் இருக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையோரங்களில் வியாழக்கிழ மை பகல் வரை இத்தகைய நிலை இருக்கும். பின்னர், படிப்படியாக கடல் சீற்றம் குறையும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

எனவே, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நாளை வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.