states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நைஜீரியா விபத்தில்  94 பேர் பலி!

புதுதில்லி, அக். 16 - நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்நிலையில், டேங்கரி லிருந்து வெளியேறிய பெட் ரோலை பொதுமக்கள் சேக ரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டு, அதில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் அதிகமானோர் படுகா யங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுதில்லி, அக். 16 - ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ஜம்மு - காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள். அவருடனும் மற்றும் அவரது குழுவுடனும், ஒன்றிய அரசு இணைந்து செயல்படும்.  மக்களுக்குச் சேவையாற்றும் அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.  ஜம்மு - காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருட னும் ஒன்றிய அரசு நெருக்கமாகப் பணியாற்றும் என்று உறுதியளித்துள்ளர்.

மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி  3% உயர்வு

புதுதில்லி, அக். 16 - மத்திய அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான அக விலைப்படி (DR) கடந்த  மார்ச் 8-ஆம் தேதி 50 சத விகிதமாக உயர்த்தப்பட்டி ருந்தது.  இந்நிலையில், விலை வாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, அகவிலைப் படியை ஜூலை 1, 2024 தேதி யைக் கணக்கிட்டு மேலும் 3 சதவிகிதம் உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள் ளது. இதன்மூலம் அக விலைப்படி 53 சதவீதமாக உயர்ந்துள்ளது.   இந்த அறிவிப்பின் மூலம் 49.18 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம்  ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு  ஆண்டு க்கு  ரூ. 9 ஆயிரத்து 448 கோடியே 35 லட்சம் கூடுதல் செல வாகும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அடைமழையிலும் 16 லட்சம்  லிட்டர் ஆவின் பால் விற்பனை 

சென்னை,அக்.16- சென்னையில் அக்டோபர் 15 அன்று மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், 201-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது.     இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறினால் மீனவர்களுக்கு  அரசின் உதவிகள் நிறுத்தம் புதுவை மீன்வளத்துறை அறிவிப்பு

புதுச்சேரி,அக்.16- புதுச்சேரி அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றால் அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.57 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை 

சென்னை,அக்.16- தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த 4 ஆம், தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.56,960-க்கு விற்பனையானது. இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை (அக்.16) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

உட்பகை கொண்டவர்கள் அதிமுகவுக்கு வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை,அக்.16-  அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கம் வருமாறு: எம்.ஜி.ஆர்., அதிமுகவை 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 இல் தொடங்கினார்.  1977, 1980, 1985 என தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு துணையாக  லட்சக்கணக்கான தொண்டர்கள் பின்தொடர அவர்களில் ஒருவராக நானும், என்னைப் போன்றோரும் வெற்றிப் பயணத்துக்கு தோள் கொடுத்து நின்றோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எண்ணற்ற துரோகங்களை முறியடித்து, ஜெயலலிதா விட்டுச் சென்ற  ஆட்சியை சிறப்புடன் நடத்தும் ஆசி கிடைத்தது. உட்பகைகொண்டவர்கள் இனி நம் இயக்கத்துக்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம். தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மழைநீர் எங்கும்  தேங்காமல்  செல்கிறது அமைச்சர்  கே.என்.நேரு பேட்டி

சென்னை,அக்.16- தமிழ்நாட்டில் சென்னை, திருவள் ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் சென்னை மாநக ராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு  புதன்கிழமையன்று செய்தியாளர் களை சந்தித்து கூறுகையில், “கடந்த ஆண்டு அனுபவத்தின் காரணமாக 990 மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 378 அம்மா உணவகங்களில் இரண்டு நாட்களாக உணவு இலவச மாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 750 கிலோமீட்டர் மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் தான் தற்போது மழை நீர் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஆவடி, மாங்காடு, தாம்பரம் என அனைத்து பகுதி களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய் தோம். எங்குமே தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. துரித நடவடிக்கை களால், கடுமையான கழை பதிவாகிய நிலையிலும், அச்சப்பட தேவையில்லாத சூழல் நீடிக்கிறது” என்று தெரிவித்தார்.

பருவம் தவறிய மழை : மதுரை ஆதீனம் உளறல்

மதுரை,அக்.16-   மதுரை ஆதீனம் அக்டோ பர் 16 அன்று  செய்தியாளர் களிடம் கூறுகையில், தமி ழகத்தில் இன்றைக்கு பரு வம் தவறிய மழை பொழி வதற்கு இளைஞர்களி டையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம் என்று உளறிக்கொட்டினார். மேலும், “கோவில் நிலங் களில் குத்தகைதாரர்கள் குத்தகைத் தொகையை ஒழுங்காகச் செலுத்துவ தில்லை” என்று கூறினார்.

145 கல்வி அலுவலர்களுக்கு  நோட்டீஸ்

சென்னை.அக்.16-  பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு  தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்கு நர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலு வலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம்  வட்டாரக் கல்வி அலு வலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்த விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வாயிலாக பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை ஆய்வு செய்த தில் பல வட்டாரக் கல்வி அலுவலர்கள் 12-க்கும் குறை வான பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்திருப் பது தெரிய வந்துள்ளது. பள்ளிகளை சரிவர பார்வை யிடாதபட்சத்தில் மாண வர்களின் கற்றல் அறிவுத் திறன் குறையக்கூடும். 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டாரக் கல்வி அலுவலர் கள் 145 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. இந்த 145 பேரில் ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்களை தவிர மற்ற வட்டாரக்கல்வி அலுவலர் கள் அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண் டும் என்று அதில் கூறப் பட்டுள்ளது.