கரூர்,நவ.8- முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் மீது மேற்படி விவகாரத்தில் நட வடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகஸ்ட் 5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ஆகஸ்ட் 14-ம் தேதி தாந்தோணி மலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார். இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் 1 இல் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம், விசாரணைக்கு அனுமதி வழங்கி தாந்தோணிமலை காவல் நிலையம் இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தர வின்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.