states

img

ஒன்றிய அரசைக் கண்டித்த எம்எல்ஏ மீது தாக்குதல் காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ-க்கள் அராஜகம்

ஸ்ரீநகர், நவ. 7 - ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேர வைக்குள் அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த லாங்கேட் தொகுதி எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக்-கை குறிவைத்து பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். ‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை மீட்டெடுக்க வேண்டும், அர சியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகையை, சட்டமன்றத்தில் அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் உயர்த்திப் பிடித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏ-வுமான  சுனில் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் குர்ஷித் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். குர்ஷித்தை பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா காப்பாற்ற முயன்ற நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.  இதனிடையே, மக்கள் மாநாடு  கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட  எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் ‘சட்டப் பிரிவு 370’ ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறை வேற்றினர்.  “ஒன்றிய அரசு, 2019-ஆம் ஆண்டு  கொண்டு வந்த ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டத்தையும், அர சியலமைப்புக்கு விரோதமாக ஒரு தலைப்பட்சமாக சட்டப்பிரிவு 370  மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டதை யும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு - காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறை மதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்ற முமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.