states

சூடான் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை ஆயுதமாக பயன்படுத்தும் அதிவிரைவுப்படை

கார்தோம், நவ.7- சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற அந்நாட்டு ராணுவத்துடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் அதிவிரைவுப்படை   கெசிரா மாநிலத்தில் பெண்கள் மீது “பாலியல் வன்முறையை ஆயுதமாக”  பயன்படுத்தி வரு கின்றது என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா நிபுணர்கள் வெளியிட்டுள் ளனர்.  மேலும் குழந்தைகள், பெண் களை கடத்துவது, அவர்களை  பாலியல் தேவைக்காக கடத்துவது உள்ளிட்ட சம்பவங் களும் அங்கு அரங்கேறி வரு கின்றன. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உள்நாட்டுப் போருக்கு இடையே  பெண்கள், சிறுமிகள் என கிட்டத்தட்ட 400 பேர் பாலியல் வன்முறையில் இருந்து தப்பி வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகள், மனிதாபிமான சேவை அமைப்புகள்  சிறிதளவு உதவி செய்துள்ளன.   11 முதல் 17 வயதுடைய குறைந்த பட்சம் 25  சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதியில் (the Horn of Africa) பெண்கள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.  அப்பெண்கள் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அதி ரடிப் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள தாக 48 வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக ஆய்வு செய்தால்  பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 200 க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும்  தெரிவித்துள்ளது.   உள்நாட்டுப் போரின் காரண மாக மருத்துவக் கட்டமைப்புகள் அதிகளவில் அழிக்கப்பட்டு வரும் காரணத்தால்  பாதிக்கப்பட்ட பெண் களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ வசதி குறைவாகவே கிடைத்து வரு கிறது எனவும் பெண்கள் அமைப்பி னர் கவலை தெரிவித்துள்ளனர். சூடான் ராணுவத்திற்கும், அந்நாட்டில் உள்ள அதிரடிப் படைக்கும் இடையே  2023 ஏப்ரல்  முதல் உள்நாட்டுப் போர் நடந்து வரு கிறது.  இந்த போரில் நாட்டின் ஒட்டு மொத்த விவசாய கட்டமைப்பை அழிப்பது, மக்களை வலுக்கட்டாய மாக உள்நாட்டிலும், நாட்டை விட்டும் அகதிகளாக வெளியேற்று வதும் நடந்து வருகிறது.   தற்போது கிழக்கு கெசிரா மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீதான தாக்குதல்களை மிக தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த தாக்கு தலில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை அதிரடிப்படை படுகொலை செய்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் அதிரடிப் படையின் பாலியல் வன்கொடுமைகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அந்நாட்டில் உள்ள இணையத்தடை உள்ளிட்ட காரணங்களால்  அதனு டைய உண்மைத்தன்மை உறுதிப் படுத்தப்படவில்லை.