மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ் டிராவில் ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வு அக்., 30 அன்று நிறைவு பெற்றது. மொத் தம் 7,994 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 921 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹரியானா வைப் போல மகாராஷ்டிராவிலும் தனது கட்சி மற்றும் கூட்டணிக்குள் கோஷ்டி பூசல் போன்ற பிம் பத்தை உருவாக்கி, போட்டி வேட்பாளர்களுடன் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிக்க பாஜக சதி செய்து வருகிறது. ராஜ் தாக்கரேவுக்கு பாஜக ஆதரவு மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாஹிம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான சிவ சேனாவின் (ஷிண்டே) சதானந்த் சர்வாங்கர் மீண்டும் அதே தொகு திக்கு பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மகாயுதி கூட்டணிக் கட்சிகள் கலந்தாலோசித்த பின்பே மும்பை மாஹிம் வேட்பா ளராக சிவசேனாவின் சதானந்த் சர்வாங்கர் அறிவிக்கப்பட்டார். ஆனால் மும்பை மாஹிம் சட்ட மன்றத் தொகுதியில் மகாயுதி கூட்ட ணியில் அங்கம் வகிக்காத மகாரா ஷ்டிர நவநிர்மாண் சேனா தலை வர் ராஜ் தாக்கரேவின் (பால் தாக் கரே மருமகன்) மகன் அமித் தாக்க ரேவுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. தனது கூட்டணிக் கட்சியான சிவசேனா வின் (ஷிண்டே) சதானந்த் சர்வாங் கருக்கு ஆதரவு அளிக்காமல், கூட்டணியில் இடம்பெறாத மகா ராஷ்டிர நவநிர்மாண் சேனாவுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அறி வித்துள்ளது கூட்டணிக்குள் குழப்பத்தையும், ஷிண்டே கட்சி க்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. பாஜக ஆதரவு வேட்பாளரை வீழ்த்துவோம் : ஷிண்டே கட்சி “பாஜக ஆதரவளிக்கவில்லை என்றாலும், தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை. பாஜக ஆதரவு வேட்பாளரான அமித் தாக்கரேவை வீழ்த்துவேன்” என மும்பை மாஹிம் சட்டமன்றத் தொகுதி சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் சதானந்த் சர்வாங்கர் அறிவித்துள்ளார். இதே போல 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக போட்டி வேட்பாளரை கள மிறக்கியும், தன்னுடைய கட்சி யைச் சேர்ந்த நிர்வாகிகளை சுயேச்சை வேட்பாளராக கள மிறக்கி கூட்டணிக்குள் அடிதடி யை தீவிரமாக்கியுள்ளது.
ஹரியானாவிலும் பாஜக நகர்வு இப்படி தான் இருந்தது
சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் தோல்வியை தழுவியது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவிற்குள் கோஷ்டி பூசல் ஏற்பட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி, அதிருப்தி அடைந்தவர்களை சுயேச்சையாக களமிறக்கியது. இதனால் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்தன. இது பாஜகவிற்கு சாதகத்தை ஏற்படுத்தின. அதாவது ஹரியானாவில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறப்பட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜக வீழ்த்தியது. அதே போல சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற சாவித்திரி ஜிண்டால் உட்பட 2க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இவ்வாறு பல்வேறு சித்து விளையாட்டுகள் மூலம் பாஜக ஹரியானாவில் வெற்றி பெற்றுள்ளது. இதே பார்முலாவை வைத்து தான் மகாராஷ்டிராவின் ஒவ்வொரு தொகுதியிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை உடைக்க பாஜக கூட்டணிக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.