states

இடமாற்றத்தால் காவல் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலம் மாயம்

சென்னை,ஜூலை 14- சென்னையில்  காவல்  நிலையங்களில் குற்றவாளி களிடமிருந்து  பறிமுதல்  செய்யப்படும்  கஞ்சா  பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர் கதையாகி இருக்கிறது.  கோயம்பேடு மற்றும் மெரினா  காவல்  நிலையங்க ளில் கஞ்சா பொட்டலங் களை  எலி தின்றுவிட்டதாக சமீபத்தில் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரி வித்தனர். இதையடுத்து கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கள்  விடுதலை செய்யப்பட்ட னர். இந்த நிலையில் கிண்டி காவல்  நிலையத்தில் இருக் கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக நீதி மன்றத்தில் காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2019-ம் ஆண்டு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்ததாக அஜ்மீர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கஞ்சா பொட்டலங் கள் கிண்டி காவல்  நிலை யத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதன்பின்னர் காவல் நிலையம் இட மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் செயல்பட தொடங்கியது. அப்போது அஜ்மீரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்ட கஞ்சா  காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனை  கிண்டி காவல்துறை யினர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.