விவசாயிகளுக்கு எதிராக பஞ்சாப் அரசு அடக்குமுறை
சண்டிகர் எல்லை மூடல்: விவசாயிகள் கொந்தளிப்பு
6 விவசாய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலை யில் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல் படுத்தக் கோரி அகில இந்திய விவ சாயிகள் சங்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புக ளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பின் கீழ் விவசாயிகள் சண்டிகரில் போராட்டம் நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்த னர். விவசாயிகள் போராட்ட அறி விப்பை ஏற்காத பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு மார்ச் 2 அன்று விவ சாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலமைச்சர் பகவந்த் மான் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ஆனால் விவசாயி களின் கோரிக்கைக்கு முதல மைச்சர் பகவந்த் மான் செவி சாய்க் காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இத னால் எஸ்கேஎம் பஞ்சாப் தலைநக ரான சண்டிகரில் மார்ச் 5 (புதன் கிழமை) அன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
வீடு புகுந்து அடக்குமுறை
இதையடுத்து சில மணிநேரங்க ளிலேயே விவசாயிகள் போராட் டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் பஞ்சாப் அரசு காவல்துறையை ஏவி மார்ச் 3 அன்று (திங்கள்), மாநிலத் தின் விவசாயிகள் சங்க தலை வர்கள், உறுப்பினர்கள், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அதிக ளவில் டிராக்டர் வைத்துள்ள விவ சாயிகளை அவர்கள் வீடுகளுக்கே சென்று கைது செய்தது. கிட்டத் தட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயி கள் சங்க தலைவர்கள் கைது செய் யப்பட்டனர். சில விவசாயிகள் தடுப்பு காவலிலும் வைக்கப் பட்டு இருந்தனர். இந்த கைது நட வடிக்கையின் போது விவசாயிகள் பலர் தாக்கப்பட்டதாகவும் செய்தி கள் வெளியாகின. விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சண்டிகர் எல்லை மூடல்
ஆம் ஆத்மி அரசின் கைது நடவடிக்கை, அடக்குமுறை மற்றும் மிரட்டல்களுக்கு அஞ்சா மல் பஞ்சாப் விவசாயிகள் புதன் கிழமை அன்று காலை சண்டிகர் நோக்கி புறப்பட்டனர். டிராக்டர்- டிராலிகள் மற்றும் பிற வாகனங்க ளில் மற்றும் நடைபயணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் 6 விளை பொருட்களை குறைந்த பட்ச ஆதரவு விலையில் வாங்கு வது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முழக்கங்களாக எழுப்பி சண்டிகர் நோக்கி சென்றனர். இதில் 30%க்கும் அதிகமானோர் பெண் விவசாயிகள் ஆவர். ஆனால் எல்லையிலேயே பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு விவசா யிகளை தடுத்து நிறுத்தியது. மொகாலி - சண்டிகர், லூதியானா - சண்டிகர், பாட்டியாலா - சண்டிகர் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைத்து சண்டிகர் எல்லையை இழுத்து மூடியது பஞ்சாப் காவல்துறை. குறிப்பாக சண்டிகர் - மொகாலி எல்லைப் பகுதி, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி போல கம்பி வலைகளுடன் மூடப் பட்டதாகவும் செய்திகள் வெளியா கின. அதே போன்று சண்டிகர் புற நகர் பகுதிகளில் சில விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு முதல் மோடி அரசு விவசாயிகள் போராட் டத்தை ஒடுக்க தொடர்ச்சியாக மேற் கொண்டு வரும் அதே அடக்கு முறையை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்
பஞ்சாப்பில் போராடும் விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயி கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பஞ்சாப் மாநிலத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) மார்ச் 5 அன்று நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி கிளர்ச்சிப் போராட்டம் நடத்திட திட்டமிட்டிருந்தது. எனினும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசாங்கம் விவசாயிகளின் ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்துள்ளது, முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் விவசாய அமைப்புகளின் தலைவர்களைக் கைது செய்யத் தொடங்கியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் என்பது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்கா கவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ள மாநிலம் என்பதையும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைப் பலிகொடுத்திருக்கிறார்கள் என்பதையும் பகவந்த் மான் மற்றும் மோடி அரசாங்கங்கள் நினைவுகூர்ந்திட வேண்டும். பஞ்சாப்பின் பாரம்பரியத்தை பகவந்த் மான் அரசாங்கம் மதித்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவுறுத்துகிறது.
தில்லியில் 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தின்போது மோடி அரசாங்கம் அளித்திட்ட உறுதிமொழிகளை இன்னமும் அது நிறைவேற்றிடவில்லை. இந்தக் கோரிக்கைகளுக்காகவும் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பிரத்யேகக் கோரிக்கைகளுக்காகவும் பஞ்சாப் விவசாயிகள் இயக்கத்தை மீண்டும் முடுக்கிவிடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் மோடி அரசாங்கம் பின்பற்றிடும் எதேச்சதிகாரப் பாதையைத் தொடர்ந்து பகவந்த் மான் அரசாங்கமும் ஜனநாயக விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
இதனை அனுமதிக்க முடியாது. விவசாயிகளையும், விவசாய இயக்கத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.