states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு காவி நிறத்தில் வர்ணம் பூசுவது ஏன்? இது கல்வியை காவி நிறமாக்கி வகுப்புவாதமயமாக்கும் வெட்கக்கேடான முயற்சியே தவிர வேறில்லை. ஆனால் இது இன்றைய தேவை அல்ல. கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அன்றைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்எஸ்எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி மும்பைக்கு வந்து, மராத்தி மும்பை நகர மொழி அல்ல என்று கூறினார். இந்த உரிமையை அவருக்கு யார் கொடுத்தது? தமிழ்நாட்டிற்கு போய் அவர்களின் மொழி தமிழ் இல்லை என்று சொல்ல முடியுமா? நிலைமை என்ன ஆகும்?

காங்கிரஸ் மூத்த தலைவர் சரண் சிங் சப்ரா

ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு காவி நிறத்தில் வர்ணம் பூசுவது போல, பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற செயல் களை தங்கள் அரசாங்கத்துடன் செய்கிறது. பாஜகவி னர் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச மாட்டார்கள்.  அதற்கு மாறாக காவி வண்ணம் மற்றும் வகுப்பு வாத பிளவுகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ரோகித் பவார்

ஒடிசா அரசு பள்ளிகளுக்கு காவி வண்ணம் பூச பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான ஆணை. கல்வியில் அரசியல் செய்வது தவறானது. அவர்கள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்று பார்ப்போம்.