இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளராக மீண்டும் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு சண்டிகரில் செப். 21 முதல் 25 வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதில் 31 பேர் கொண்ட தேசிய நிர்வாகக்குழுவும், 11 பேர் கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினராக இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.
தேசியக்குழு உறுப்பினர்களாக தமிழ்நாட்டில் இருந்து 1.மு.விரபாண்டியன், 2.டி.எம்.மூர்த்தி, 3.நா.பெரியசாமி, 4.க.சந்தானம், 6.வை.செல்வராஜ், எம்.பி, 7.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, 8. எம்.ஆறுமுகம், 9. மு.கண்ணகி, 10. ஜி.ஆர்.ரவிந்திரநாத்,11.எம்.செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.