states

img

“புதுச்சேரி மக்கள் சோதனை எலிகள் அல்ல”: பாஜக அரசுக்கு தலைவர்கள் எச்சரிக்கை

காரைக்கால்,ஜூன் 16- புதுச்சேரி யூனியன் பிரதே சத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவுக்கு, மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து தனியார்மய நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு மின்துறை ஊழியர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில்  மின்துறையை தனியார்மயமாக் கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு துணைபோகும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காரைக்காலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் வியாழனன்று (ஜூன் 16)  மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் திமுக அமைப்பா ளரும், சட்டப்பேரவை உறுப்பினரு மான ஏ.எம்.எச்.நாஜிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ப.மதியழகன், விடு தலை சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளர்  அரசு. வணங்காமுடி, முஸ்லிம் லீக்,  திராவிடர் கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணிக் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் தலைவர்கள் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுக ளாக பிரதமர் மோடி தலைமை யிலான அரசு, அரசு சொத்துகளை தனியாருக்கு விற்கும் நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பி லான சொத்துகள், 3 ஆயிரம் தொழி லாளர்களை கொண்ட மின் துறையை தனியாருக்கு கொடுப்ப தற்கான அனுமதியை புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் அரசு கொடுத்துள்ளது”என்று குற்றம் சாட்டினர். மாநிலக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் பாஜகவின் கைப்பாவைகளாக உள்ளன. புதுச்சேரி மக்கள் சோத னை எலிகள் அல்ல. அரசின் இது போன்ற செயல்பாடுகளுக்கு எதி ராக மக்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவார்கள் என்றும் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.