states

உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் மே தினம் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வாழ்த்து!

புதுச்சேரி, ஏப். 30- மேதினத்தையொட்டி புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உழைக்கும் பாட்டாளித் தோழர்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். “உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்”என்கிற உரிமை முழக்கத்தை, உலக வரைபடத்தின் எல்லைக்கோடுகளைத் தாண்டி ஒலிக்கச் செய்து, முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலைநாட்டிக் கொண்ட நாள்தான் மேதினம். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றலை, அந்த வர்க்கத்தின் தேவையை உணர்ந்து, அவர்களது உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. மனிதகுலத்தின் மேன்மைக்காகவும், நாட்டின் நல னுக்காகவும், வளர்ச்சிக்காகவும், வலி மைக்காகவும் அயராது பாடுபடும் பாட்டாளி வர்க்கத் தோழர்கள் தங்களது வாழ்வில் ஒளிபெற்று, மேன்மை பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.