states

புதுவை கலாம் அறிவியல் கோளரங்கத்தில் புத்தாக்க மையம்

புதுச்சேரி, மே 18- லாஸ்பேட்டை கலாம் அறிவியல் கோளரங்கத்தில் ரூ. 1.50 கோடியில் அமைக் கப்படுள்ள புத்தாக்க மைய த்தை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார் இந்திய அரசின் கலாச் சார அமைச்சகம், தேசிய அருங்காட்சியக மன்றம் ஆகியவை இணைந்து புதுவை லாஸ்பேட்டையில் அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங் கத்தை 2015இல் நிறுவினர். இந்த அறிவியல் மைய வளா கத்தில் தேசிய அருங்காட்சி யக மன்றம், புதுவை அறிவி யல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து ரூ.1.50 கோடி செலவில் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளனர். இந்த மையத்தின் செயல்பாடு, பராமரிப்பு 3  ஆண்டுக்கு ரூ.45 லட்சம்  என மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. இத்தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொள் ளும். புத்தாக்க மையத்தில் மாணவர்கள் கண்டுபிடிப்பு மையம், திட்ட ஆய்வகம், உடைத்தல், உருவாக்குதல்,  உடைந்த பொருட்களில் செய்தல், ஆலோசனைப் பெட்டி, வடிவமைப்பு, ஓவிய  அறை ஆகியவை உள்ளது. இந்த புத்தாக்க மையத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் புதனன்று (மே 18) திறந்து வைத்தார். இதில் முதலமைச்சர் ரங்க சாமி, செல்வகணபதி எம்.பி., அறிவியல் தொழில் நுட்பத் துறை செயலர் ஸ்மித்தா, சாதனா, முதுநிலை பொறி யாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.