election2021

img

தமிழகம்-புதுவையில் இன்று வாக்குப்பதிவு....

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு செவ்வாயன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர், பெண்வேட்பாளர்கள் 411, மூன்றாம்பாலினத்தவர் 2 பேர். அதிக பட்சமாக கரூர் தொகுதியில்  77 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அரவக்குறிச்சியில் 40 பேர்களம் காண்கின்றனர். சென்னை ஆர்.கே.நகரில் 31 பேரும், சைதாப்பேட்டையில் 30 பேரும் போட்டியிடு கின்றனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

பதற்றமானவை
இந்த தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும்பதற்றமானவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மேலும் 10,528 சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து372 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரும் அடங்குவர். 

இதுதவிர முன்னாள் ராணுவத்தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், சிறை வார்டன்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 34 ஆயிரத்து 130 பேர் பணியில் உள்ளனர்.மேலும், வெளி மாநிலங்களி லிருந்து 6 ஆயிரத்து 350 போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக டி.ஜி.பி. திரிபாதி தெரிவித் திருக்கிறார்.இந்த முறை கொரோனா பரவல்காரணமாக ஆயிரம் வாக்காளர் களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல்வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னை உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்புநடவடிக்கைகளை கண்காணிக் கவும், முதியவர்களுக்கு உதவி செய்யவும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் காலை 7 மணி முதல்இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 விழுக்காடு வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இளைய தலைமுறை...
21 லட்சம் புதிய வாக்காளர் களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையர்தெரிவித்திருக்கிறார். வாக்குப்பதிவுதொடர்பான தகவல்களை பெற 1950என்ற எண்ணை தொடர்புகொள்ள வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக் கும் கொண்டு செல்லப்பட்டு  வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும்அலுவலர்களும் நியமிக்கப்பட்டு ள்ளனர். இவர்களின் மேற்பார்வை யில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர். வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றே மேற்கொள்ளப்பட்டன. அனைத்து சாவடிகளிலும் குடிதண்ணீர் வசதிசெய்வதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றன. 

கேரளம்...
இதேபோன்று புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் செவ்வாயன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறு கிறது. தமிழகத்தை போன்றே இந்த மாநிலத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 

மேற்குவங்கத்தில் 3ஆவது கட்டம் 
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 6 அன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹூக்ளி, ஹவுரா, தெற்கு 24 பர்கானா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி 832 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.