மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு முறையாக மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், மத்திய அரசு சுகாதாரத் திட்டம் நாட்டில் எப்படிச் செயல்படுகிறது என்றும், அதன்கீழ் அனைவருக்கும் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும், கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்த்திய அரசு சுகாதாரத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கானது என்றும், இது ஊழியர்களின் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் திட்டமாகும் என்றும், எனவே மருந்துகள் கைவசம் இல்லையெனில் வரவழைக்கப்பட்டு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.