சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னையில், தொடர்ச்சியாக விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயப்பேடை அருகே போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை இன்று(9.11.24) போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.