states

ஈரான் – இஸ்ரேல் போர்ப் பதற்றம் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்க்கு ரூ. 15 லட்சம் கோடி இழப்பு

மும்பை, அக். 3 - இஸ்ரேல் மற்றும் ஈரான்  நாடுகள் இடையே ஏற்பட்டு ள்ள போர்ப் பதற்றம் காரண மாக, உலக நாடுகளில் பங்குச் சந்தை மிகப்பெரிய அள வில் சரிவைக் கண்டுள்ளது.

இதில், இந்தியப் பங்குச் சந்தைகளும், வியாழ னன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே மிகப் பெரிய சரிவைக் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறி யீட்டு எண்ணான சென் செக்ஸ் 1244 புள்ளிகள் சரிந்து 83 ஆயிரத்து 022 புள்ளி களுக்குச் சென்றது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீட் டெண்ணான நிப்டி 295 புள்ளி கள் வரை சரிந்து 25 ஆயி ரத்து 507 புள்ளிகளுக்கு இறங்கியது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24  நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் குறைந்தன. குறிப்பாக, வங்கித்துறை தகவல் தொழில்நுட்பத் துறை, வாகன தயாரிப்பு நிறு வன பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகின.

டாடா மோட்டார்ஸ், ஏசி யன் பெயிண்ட்ஸ், எல் அண்ட் டி, ஆக்சிஸ் பேங்க், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், மாருதி, கோட்டக் மகிந்திரா பேங்க், ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் சென்றன.

இதன்மூலம், கடந்த 3  வர்த்தக நாட்களில் மட்டும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டா ளர்கள் ரூ. 15 லட்சம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளனர்.