மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 21 மாதங்களாக குக்கி-மெய்டெய் இன மக்களுக்கு இடையே மோதல்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களால் 260-க்கும் மேற்பட்ட்ரோ உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக மீது எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலையில் பைரேன் சிங் ராஜினாமா செய்திருந்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பால் அதனை திரும்பப்பெற்றார்.
இதனையடுத்து, கடந்த 9-ஆம் தேதி மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் மீண்டும் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படவிருந்த நிலையில், மணிப்பூரில் முழு நேர முதல்வர் இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன் (பிப்.12) முடிவடைந்தது.அவ்வாறு சட்டப்பேரவை கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலையைத் தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்படி, இன்றிலிருந்து மணிப்பூரில் குடியரசித் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.