மும்பை:
மகாராஷ்டிராவில் ஞாயிறன்று (ஏப்.4) இரவு 8 மணி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம்முழுவதும் கொரோனா பரவல்தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. இந்த சூழலில் ஓரளவு கொரோனா பரவல் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது.இதைத் தடுப்பதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இது பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனிடையே ஞாயிறன்று இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டது.
இதில் மகாராஷ்டிரா, தில்லி, கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஞாயிறன்று இரவு8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர்மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக் கொள்ளலாம் என்று மத்தியஉள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால், மகாராஷ்டிராவைப் போலவே மற்ற மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.