மும்பை ஐஐடியின் விடுதியில், மாணவர் ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடியில், தொடர்ந்து தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. மும்பை ஐஐடியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த குஜராத்தை சேர்ந்த மாணவர் தர்சன் சொலாங்கி (18வயது), தனது விடுதியின் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஐஐடியில் சேர்ந்து 3 மாதங்களில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொவாய் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.