states

img

தண்ணீர் தொட்டி சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மும்பையில், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள நாக்படா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மயங்கி விழுந்த 5 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை சோதித்த மருத்துவர்கள், 5 பேரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பிரஹன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.