tamilnadu

img

கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்

கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்

வெயிலின் தாக்கம் அதிக ரித்து வரும் நிலையில் கோவை குற்றாலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சுமார் 3000 மக் கள் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி சாலை யில் கோவை குற்றாலம்  அருவி அமைந்துள்ளது. இது கோவை மாவட்டத்தில் உள்ள முக் கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வழக்கமாக கோடை விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்க ளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு  வந்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த  சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் சனி மற்றும்  ஞாயிறு விடுமுறை தினங்களில் கோவை மற் றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். கோடை காலம்  நெருங்கி வருவதால் கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் சுற்றுலாப்  பயணிகளின் வருகை அதிகமாகவே உள் ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்க ளில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.