லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் பணியிடை நீக்கம்
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நர சிங்கபுரம் நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற் போது பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட் பட்ட விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கணபதி. இவர் அதேபகுதியில் புதி தாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வைகளை பெயர் மாற்றம் செய்வதற் காக நகராட்சி அலுவலகத்திற்கு சென் றுள்ளார். அப்போது நகராட்சி அலுவல கத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வரும் குணசேகரன் என்பவர், ரூ.40 ஆயி ரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கணபதி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீ சாரிடம் புகாரளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத் தல்படி ரூ.25 ஆயிரம் ரசாயனம் தடவப் பட்ட நோட்டுக்களை கணபதி, தனது தந்தை ராமசாமி மூலம் குணசேகரனி டம் கொடுக்கும் பொழுது, கையும் களவு மாக குணசேகரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன் றத்தில் நேர்நிறுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் குண சேகரனை பணியிடை நீக்கம் செய்து நக ராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மண் கடத்தல்
சேலம், மார்ச் 9- சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள 74.கிருஷ் ணாபுரம் பகுதியில், அரசு அனுமதியின்றி மண் கடத்தி வருவ தாக புகார் எழுந்தது. இந்நிலையில், கெங்கவல்லி காவல் துறையினர் சனியன்று இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கிருஷ்ணாபுரம் வசிஷ்ட நதி பகுதியில் போலீசார் சென்றபோது, மண் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மண் கடத்தலுக்காக பயன் படுத்திய டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அனு மதியின்றி மண் கடத்தியவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை கொள்ளை
தருமபுரி, மார்ச் 9- தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி அருகே, சேலம் – தருமபுரி தேசிய நெடுஞ் சாலை பகுதியைச் சேர்ந்த வர் ஷேர்லின் பெல்மா (44). நல்லம்பள்ளியை அடுத் துள்ள கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி யில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். தாய் மேரியும், ஷேர்லின் பெல்மா வும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், மேரி மருத்துவ சிகிச்சைக் காக, வேலூருக்கு சென்ற நிலையில், வழக்கம்போல் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு சனியன்று பள் ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்தபின் மாலை மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, உள்ளே சென்று அவர் பார்த்தபோது, பீரோ வில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் திருடுபோனது தெரி யவந்தது. இதுகுறித்த தக வலின்பேரில், அதியமான் கோட்டை காவல் துறையி னர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ் வரன் ஆகியோர் ஆசிரியை வீட்டில் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன.
சாலையில் கட்டப்பட்ட கயிற்றால் 2 பேர் படுகாயம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலையோரம் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் காயமடைத்தனர். நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தர வின் பேரில், மகளிர் தின கொண்டாட் டத்திற்காக, உதகை கமர்சியல் சாலை யின் மேல் மின்விளக்கு அலங்கார பந் தல் அமைக்கும் பணி வெள்ளியன்று காலை முதல் நடைபெற்று வந்தது. அப் பணியை நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சனி யன்று காலை வரை செய்த நிலை யில், போலீசாருக்கு தகவல் தெரிவிக் காமலும், அனுமதி பெறாமலும் சாலை யின் குறுக்கே வாகனங்கள் செல்லாத வகையில் நைலான் கயிறு மற்றும் கம் பியை கட்டிவிட்டு சென்றுள்ளனர். அச் சாலையில் எமரால்டு அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தொழி லாளர்கள் ஸ்ரீதரன் (35), மணி (28) ஆகி யோர் இருசக்கர வாகனத்தில் வந்துள் ளனர். அப்போது சாலையின் குறுக்கே இருந்த நைலான் கயிறு மற்றும் மெல் லிய கம்பியில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் ஸ்ரீதரனின் மூக்கில் நைலான் கயிறு மற்றும் கம்பி அறுத்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து அதே சாலையில் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்த உதகை மத் திய காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரின் கழுத்தையும் நைலான் கயிறு மற்றும் கம்பி அறுத்தது. இருவரும் படு காயமடைந்த நிலையில் தொழிலாளி ஸ்ரீதரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டு உள்ளார். கழுத்தில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து சனியன்று இரவு நடை பெற இருந்த மகளிர் தின கொண்டாட் டம் ரத்து செய்யப்பட்டு, அவசர அவசர மாக மின் அலங்காரங்களும் அகற்றப் பட்டது. இதற்கிடைய முறையாக அனு மதி பெறாமல் அலட்சியமாக பணியாற் றிய நகராட்சி ஒப்பந்ததாரர்கள் முரளி குமார் மற்றும் தயாள கிருஷ்ணன் ஆகி யோர் மீது உதகை மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த னர்.