பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், பெண்களை கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், “அப்பாவி மகள்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில், பெண்களை கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு, நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.