கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே சுற்றுலா வந்த இஸ்ரேலிய பெண் உட்பட இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 3ஆவது நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே துங்கபத்ரா இடதுகரை கால்வாய் அருகே 2 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 5 பேர், கடந்த வியாழக்கிழமை இரவு நட்சத்திரங்களை பார்த்தவாறு பொழுதை கழித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சுற்றுலா வந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், 3 ஆண்களையும் கால்வாய் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், இஸ்ரேலிய பெண் உட்பட இரு பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். கால்வாயில் தள்ளப்பட்ட 3 ஆண்களில் 2 பேர் நீந்தி கரையேறி வந்துள்ளனர். மற்றொருவரின் நிலை குறித்த தகவல் தரியாமல் இருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கால்வாய்யில் தள்ளப்பட்ட சுற்றுலா பயணி ஒருவர், 2 கிமீ தள்ளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 3ஆவது நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.