tamilnadu

img

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று
செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பழமை  வாய்ந்த ரயில் நிலையமாக பொம் மிடி ரயில் நிலையம் கோவை -  சென்னை மார்க்கத்தில் அமைந் துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கா லத்தில் 1867 ஆம் ஆண்டு கட்டப் பட்ட இந்த ரயில் நிலையம் 158  ஆண்டுகளை கடந்து செயல்பட்டு  வருகிறது. தருமபுரி, சேலம் மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் தினமும் கேரளம், கர் நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி  மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் கோவை, சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்த பொம் மிடி ரயில் நிலையத்திலிருந்து சென்று வருகின்றனர். மிகவும் பழ மையான ரயில் நிலையத்தை சீர மைக்க வேண்டுமென பொதுமக் கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து  வந்தனர். இதையடுத்து அம்ரித்  பாரத் திட்டத்தின் மூலம் ரூ.16  கோடி மதிப்பில் இந்த ரயில் நிலை யத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரமாண்டமான நுழைவாயில், 200க்கும் மேற்பட்ட கார்கள் நிற் கும் வசதி, விசாலமான இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குளிர்சா தன காத்திருப்பு அறை, பெண்க ளுக்கான காத்திருப்பு அறை, புதுப் பொலிவுடன் நடை மேடை, பாது காக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்கா ணிப்பு கேமரா, நடைமேடையை கடக்க லிப்ட் வசதி உள்ளிட்ட பல் வேறு மேம்பாட்டு பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளன.

இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில், பல  ரயில்கள் பொம்மிடியில் நிற்காமல் செல்வதால் பயணிகள் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். பொம்மிடி ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயி ரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏற்காடு, வெஸ்ட் கோஸ்ட், புனே - கன்னியாகுமரி இன்டர்சிட்டி, பொக்காரோ, தன் பாத் உட்பட 8 ரயில்கள் இரு மார்க் கத்திலும் பொம்மிடியில் நின்று செல் கின்றன. கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், நாகர்கோவில் விரைவு ரயில்கள், கோவை - திருப் பதி இன்டர்சிட்டி ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும். முன்பதிவு இல்லா ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும். விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் இந்த ரயில் நிலையத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தியதற் கான பயன் இருக்கும். இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  150க்கும் மேற்பட்ட கிராமங்களைச்  சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். லட் சக்கணக்கான குடும்பங்களின் வாழ் வாதாரமும் மேம்படும். எனவே, ரயில்வே நிர்வாகமும், தமிழக அர சும் உரிய நடவடிக்கை எடுத்து, பொம்மிடியில் கூடுதலாக ரயில் நின்று செல்வதை உறுதி செய்ய வேண்டும், என அப்பகுதி பொது மக்கள், ரயில் பயணிகள் வலியு றுத்தியுள்ளனர்.