மத்திய அமைப்பான அமலாக்கத்துறை, சட்டத்தின் வரையறைக்குள் நடக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடித்தி வரும் ராகேஷ் ஜெயினுக்கு எதிரான பணமோசடி வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் விசாரணையைத் தொடங்கியதற்காக அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். மேலும், மத்திய அமைப்பான அமலாக்கத்துறை, சட்டத்தின் வரையறைக்குள் நடக்க வேண்டும்; சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.