tamilnadu

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்பு

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.  ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு, குறிப் பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்  தாக்குதலை நடத்தி வருகிறது. முஸ்லிம்  மக்களின் குடியுரிமையைக் கேள்வி கேட்ப தோடு தற்போது வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை பராமரிக்கும் வாரியத் தையே சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. முஸ்லிம் மக்கள் மத்தி யில் பிரிவுகளை உருவாக்கி ஆதாயம் தேட  பாஜக முயற்சிக்கிறது.

இந்தச் செயல்களுக்கு எதிராக நாடா ளுமன்றத்தில் பாஜகவை தவிர்த்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த  சட்ட முன்வடிவு நாடாளுமன்ற கூட்டுக்குழு  பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  நாடாளுமன்றக் குழுவின் முன்பு  இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான  மக்களின் எதிர்ப்பு கருத்துக்கள் வந்ததன் விளைவாகவும், நாடாளுமன்ற குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அர சின் முன்மொழிவுகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துகளை முன் வைத்ததன் விளைவாகவும், அந்த குழுவில் இருந்த  எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் நீக்கிவிட்டு, தனக்கு சாதகமான முடிவு களோடு இந்த மசோதாவை நிறைவேற்ற  பாஜகவினர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த முயற்சிகளுக்கு எதிராக இந்தி யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இந்த வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்து களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், சட்டமன்றத்திலும் முத லமைச்சரால் முன்மொழியப்பட்ட ஒன்றிய  அரசின் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழக அரசால் முன்மொழியப் பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவோடு  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மா னத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது.  வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சருக்கும், அனைத்து கட்சியினருக்கும், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை  கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக் கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.